குஜராத் கலவரத்தால் பிரபலமானவர் மோடி.. மதசார்பின்மையை இடித்து இந்து ராஷ்டிரம் கட்ட முயற்சி -ஒவைசி
ஐதராபாத்: குஜராத் கலவரத்துக்கு பிறகே நரேந்திர மோடி பிரபலமடைந்ததாகவும், அவர் பிரதமரான பிறகு மதசார்பின்மையை இடித்து இந்துத்துவத்தை கட்டப்பட்டு வருவதாகவும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "கும்பல் படுகொலைகள், முத்தலாக் தடை சட்டம், மசூதிகள் மீது குறி வைப்பது, இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தங்களின் இலக்கை நோக்கி செல்வதை காட்டுகிறது.
பாஜக கடந்த 8 ஆண்டுகளாக வெறுப்பு அரசியலை செய்து வருகின்றது. அவர்கள் தங்களின் கருத்தியல் நோக்களை அடைய வன்முறையை ஊக்குவிக்கின்றார்கள்.

இந்து ராஷ்டிரம்
பாஜக வன்முறையை 8 ஆண்டுகளில் சட்டப்பூர்வமாக்கி உள்ளனது. இந்துத்துவா என்பது இந்துமதத்திற்கு எதிரானது. இந்துத்துவா இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது. அது சமத்துவத்தை ஏற்க மறுத்து ஒரே நாடு, ஒரே மதம் என்று பேசுகிறது. இந்து மேலாதிக்கமே இந்து ராஷ்டிரத்தின் கொள்கை. இந்து அல்லாதவர் அடிபணிந்து செல்ல வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

மதசார்பின்மை
நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்தே மதசார்பின்மை இடிக்கப்பட்டு இந்து ராஷ்டிரம் கட்டப்படுகிறது. மதசார்பின்மை இறந்துவிட்டால் இந்தியாவின் ஒட்டுமொத்த கொள்கையும் வலுவிழந்துவிடும். பன்முகத்தன்மையே இந்தியாவை ஒற்றுமையாகவும் வலிமையாகவும் வைத்திருக்கிறது. பன்முகத்தன்மையும் மதசார்பின்மையும்தான் இந்தியாவின் நெறிமுறைகள். பன்மைத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை நாம் வலுப்படுத்த வேண்டும்.

சமத்துவத்துக்காக போராடுவோம்
அனைத்து இந்தியர்களின் உரிமைகளை பாதுகாப்பதும், அரசியலமைப்பின் மாண்புகளையும் பாதுகாப்பதே எங்கள் முதன்மை நோக்கம். அதற்காகவே நாங்க போராடி வருகிறோம். நீதிக்காகவும், விடுதலைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சகோதரத்துவத்துக்காகவும் போராடுகிறோம். இந்துத்துவ கொள்கை திட்டத்தின்கீழ் இந்தியாவை பலவீனமாக்கவும், அழிக்கவும் முயற்சிகள் நடைபெறும்போது நாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.

கும்பல் படுகொலைகள்
பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகே கும்பல் படுகொலைகள் அதிகரித்தன. முஹம்மது அக்லாக், பெஹ்லு கான், ரக்பார், ஹஃபீஸ் ஜுனைத் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டார்கள். 2015 ஆம் ஆண்டு பசுவை வைத்திருந்ததாக கூறி அக்லாக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இதுபோன்ற வன்முறைகளை கண்டித்தது இல்லை. அவர்களை ஊக்கப்படுத்துகிறது.

கோட்சேவின் கொள்கை
நாதுராம் கோட்சேவின் இந்துத்துவ கொள்கைகளின் விளைவாகவே இஸ்லாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்படுகிறார்கள். கோழைத்தனம், வன்முறை, கொலை ஆகியவற்றுக்கும் கோட்சேவின் கொள்கைக்கும் பிரிக்க முடியாத உறவு உள்ளது. மத்திய அரசு வெறுப்பை பரப்பிய யாதி நரசிங்நாத், இனப்படுகொலை ஆதருத்த சன்சாத் கும்பல், நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் உள்ளிட்ட பலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாரக்கணக்கில் போராட்டங்கள் நடத்தியதற்கு பிறகும், சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்த பிறகுமே அவர்கள் சாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குஜராத் கலவரம்
அதேநேரம் மாணவர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் சிறையில் அடைக்கப்படுகின்றனர். நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்களுக்கு பரிசு கிடைத்துவிட்டது. 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு பிறகே அவர் பிரபலமடைந்தார். சொல்லப்போனால் என் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பிரபலமான இந்துத்துவ அரசியல்வாதிகளாக எதிர்காலத்தில் வருவார்கள். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications