தனிமையில் இருந்த காவ்யா.. பெட்ரூமுக்குள் நுழைந்த இளைஞர்.. அடுத்தடுத்த சம்பவம்.. நிலைகுலைந்த நெல்லூர்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே காதலுக்கு பெண் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஒருதலை காதலன்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தாட்டி பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி.. 34 வயதாகிறது.. இவர் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் காவ்யா 24 வயதாகிறது.. புனேவில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால், சுரேஷ் ரெட்டி, காவ்யாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார்.

காவ்யா
பலமுறை காவ்யாவிடம், தன்னுடைய காதலை சுரேஷ் சொல்லி உள்ளார்.. ஆனால், அந்த காதலை காவ்யா ஏற்க மறுத்துவிட்டார்.. எனினும், கல்யாணம் செய்தால் காவ்யாவைதான் செய்வது என்று முடிவெடுத்து, காவ்யாவின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார்.. அவர்கள் மறுத்துவிட்டனர்.. இதனால், மீண்டும் ஒருமுறை சென்று பெண் கேட்டார்.. அப்போது, பெற்றோர்கள் தங்களுக்கு விருப்பம் என்றாலும், காவ்யாவுக்கு விருப்பம் இல்லாமல் சம்மதம் தர முடியாது என்றனர்.. பெண்ணை கட்டாயப்படுத்த முடியாது என்றும் சொல்லிவிட்டனர்.

காவ்யா காதல்
இதனால் காவ்யா மீது சுரேஷூக்கு வெறுப்பும் ஆத்திரமும் ஏற்பட தொடங்கியது.. இது நாளுக்கு நாள் அதிகமாகவும் ஆரம்பித்தது.. இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரிலிருந்து, தன்னுடைய வீட்டிற்கு வந்த சுரேஷ், மறுபடியும் வேலைக்கு போக பிடிக்காமல், வீட்டிலேயே இருந்தார்.. நேற்று மாலை 3 மணியளவில் காவ்யாவின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றதை கவனித்த சுரேஷ், நேரடியாக காவ்யா வீட்டிற்கு சென்றார்.. தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று மறுபடியும் கட்டாயப்படுத்தினார்.

சுரேஷ்
இதனால் காவ்யா கோபம் அடைந்தார்.. திருமணம் செய்ய மறுப்பு சொன்னார்.. அப்போது ஆத்திரம் அடைந்த சுரேஷ், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவ்யாவை நோக்கி சுட்டுவிட்டார்.. ஆனால், அந்த துப்பாக்கி குண்டு குறி தவறி, அங்கிருந்த கட்டிலின் மீது பட்டு வெடித்தது.. இதை பார்த்து பயந்துபோன காவ்யா, அலறி கூச்சலிட்டார்... இதனால் 2வது முறையாக துப்பாக்கியை எடுத்து, காவ்யாவின் தலையில் சுட்டார் சுரேஷ்.. அந்த குண்டு காவ்யாவின் தலையை துளைத்து கொண்டுபோனது.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் காவ்யா.

துப்பாக்கி சத்தம்
காவ்யா கண்ணெதிரே சுருண்டு விழுந்ததும், அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார் சுரேஷ்.. காவ்யா வீட்டிற்கு சுமார் 100 மீட்டர் தொலைவில், அதே துப்பாக்கியால், தன்னுடைய நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார் சுரேஷ்.. இப்படி அடுத்தடுத்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் பதறி கொண்டு ஓடிவந்தனர்..

நெல்லூர் போலீஸ்
ஆனால், அதற்குள் சுரேஷும், காவ்யாவும், ரத்த வெள்ளத்தில் தனித்தனி இடங்களில் பிணமாக மிதந்தனர்.. இதுகுறித்து உடனடியாக நெல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.... போலீசாரும் விரைந்து வந்து, இருவரின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... சம்பவ இடத்தில் விழுந்து கிடந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.. மேட் இன் யுஎஸ்ஏ என்று துப்பாக்கி மீது பொறிக்கப்பட்டிருந்தது..

விசாரணை
சுரேஷின் நண்பர்கள் சிலர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்களாம்.. அவர்கள் மூலமாக துப்பாக்கி கிடைத்ததா? அல்லது பெங்களூருவில் இருந்தே யாரிடமாவது வாங்கி கொண்டு வந்தாரா? என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. காதலுக்கு எதிர்ப்பு சொல்லி, திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டதும், இளைஞரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதும் தாடிபத்திரி கிராம மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications