இவனும் அண்ணனா.. 13 வயது தங்கையை.. பதற வைக்கும் சம்பவம்.. அதிர்ந்து போன ஆந்திரா!
தங்கையை விபச்சார கும்பலிடம் விற்றுள்ளார் அவரது அண்ணன்
ஹைதராபாத்: 13 வயது தங்கச்சியை, விபச்சாரம் செய்பவர்களிடம் அண்ணன் விற்றுவிட்டார்.. இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்காரயகொண்டா நகரில் வசித்து வந்துள்ளது ஒரு குடும்பம்.. அந்த நபருக்கு 2 மனைவிகள்.. ஆனால், 2வது மனைவியிடம் சொத்து தகராறு இருந்து வந்தது.. அதனால் தினமும் சண்டையும் நடந்து வந்துள்ளது.

இதனால், 2வது மனைவி, தன்னுடைய 13 வயது மகளை அழைத்து கொண்டு, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அவரது அம்மா வீட்டில் தாயாரும், மகளும் நெல்லூர் மாவட்டத்தின் காவலியில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி, முதல் மனைவிக்கு பிறந்த மகன், 2வது மனைவி வீட்டுக்கு வந்திருந்தார்.. அங்கிருந்த 13 வயது தங்கையை கடைக்கு கூப்பிட்டு செல்வதாக சொல்லி சிங்காரயகொண்டாவுக்கு அழைத்து வந்துள்ளார்.. பிறகு அவரும் அவருடைய தாயாரும் சேர்ந்து அந்த பகுதியில் செயல்படும் விபச்சார கும்பலிடம் சிறுமியை விற்றுவிட்டனர்... ரூ.27,000க்கு விற்றுள்ளனர்.
சிறுமி அங்கே போய் பயந்துவிட்டார்.. என்ன செய்வது, எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவித்தார்.. பிறகு ஜூலை 18-ம் தேதி ஒருவழியாக செல்போன் ஒன்று கிடைக்கவும், அதிலிருந்து போலீஸ் நம்பர் 100க்கு போன் செய்து, விபச்சார கும்பலிடம் சிக்கி கொண்டதை தெரிவித்துள்ளார்.. இதற்கு பிறகுதான் சிறுமியை மீட்க போலீசார் துரிதமாயினர்.. ஆனால் ரகசியமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வருமான வரியில் சந்தேகமா? எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்!
சிறுமி எங்கிருந்து போன் செய்தார் என்ற செல்போன் டவரை வைத்து, அந்த இடத்தையும் கண்டுபிடித்தனர்.. இறுதியில் சிக்கிய சிறுமியை மீட்டு கொண்டு வந்தனர். இவ்வளவு நாள் தங்கள் குழந்தை விபச்சார கும்பலிடம் சிக்கியிருந்ததை கேள்விப்பட்டு குடும்பத்தினர் அதிர்ந்தனர்.
பிறகு சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்தனர்.. விபச்சாரம் நடந்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர்.. ஆனால் சிறுமியை கொண்டு போய் அந்த கும்பலிடம் விற்ற அண்ணன், முதல் மனைவி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்!












Click it and Unblock the Notifications