பரிதாப நிலையில் பாஜக.. தெலுங்கானா கிரீடம் கேசிஆருக்கே! காங்கிரஸுக்கு ஜஸ்ட் மிஸ் -கருத்துக்கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியே வெற்றிபெறும் என டெமாக்ரசி டைம்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தென் மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி 2 வது முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியுடன் இந்த ஆட்சிகாலம் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி வரும் தெலுங்கானாவில் நவம்பர் 30 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகியவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி கடந்த ஆகஸ்டு மாதமே வேட்பாளர் பட்டியலை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இம்முறை பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும், சில கருத்துக்கணிப்புகள் பிஆர்எஸ் கட்சி வெற்றிபெறும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்து உள்ளது. அதன்படி 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் மீண்டும் ஆளும் பிஆர்எஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பான்மைக்கு 60 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அக்கட்சி 61 தொகுதிகளில் வென்று நூலிழையில் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 49 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி அடையும் எனவும் கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications