பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டாம்! இந்தியாவில் 23 கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம்.. ஓவைசி கடும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ‛‛இந்தியாவில் 23 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதையும் எங்களின் முன்னோர்கள் பாகிஸ்தானை ஏற்க மறுத்ததையும் மறந்து விட வேண்டாம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இஸ்லாமை ஒரு முகமூடியாக பயன்படுத்துகிறது'' என்று பாகிஸ்தானை விளாசி உள்ளார்.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததை மனதில் வைத்து பாகிஸ்தான் நம்மை தாக்க முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த முயற்சிகளை நாம் முறியடித்தோம். நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 3 விமானப்படை தளங்களை ஏவுகணைகளை ஏவி நாம் அழித்தோம்.

pakistan india asaduddin owaisi

இதையடுத்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன்களை ஏவியது. அந்த ஏவுகணை, ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. இருநாடுகள் இடையே நேற்று போர் பதற்றம் உச்சமடைந்தது. இதையடுத்து நேற்று மாலையில் போர் நிறுத்தம் செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மாலை புரிந்துணர்வு ஏற்பட்டது. அதன்பிறகும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது. போர் நிறுத்தம் அமலான பிறகும் கூட பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டியது. இதற்கு நம் படை வீரர்கள் உரிய முறையில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பேட்டியளித்தார். அதில் பாகிஸ்தானுக்கு கடும் வார்னிங் செய்தார். இதுபற்றி அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: இந்தியாவில் 23 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதையும், இருநாடு கோட்பாட்டை எங்களின் முன்னோர்கள் ஏற்க மறுத்ததையும் பாகிஸ்தான் மறந்து விடுகிறது.

ஜின்னா முன்மொழிந்த இருநாடு கோரிக்கையை நாங்கள் வெறுக்கிறோம். நாங்கள் நிராகரித்தோம். இந்தியாவை எங்களின் நாடாக ஏற்றுக்கொள்கிறோம். தொடர்ந்து இங்கேயே இருப்போம் பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் இந்தியாவை பிரிக்க விரும்புகிறது. இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் இங்குள்ள பிற சமூகங்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்த விரும்புகிறது.

இருநாடு கோட்பாட்டை உண்மையில் நம்பினால் பாகிஸ்தான் ஏன் ஆப்கானிஸ்தான் எல்லை, ஈரான் எல்லைகளில் குண்டுகளை வீசி பலூச் மக்களை கொல்கிறது. ஆப்கானியர்கள் முஸ்லிம்கள், ஈரானியர்கள் முஸ்லிம்கள், பலூச்சிகள் முஸ்லிம்களாகவும், பாகிஸ்தானை சொந்த நாடாக கொண்டவர்களாகவும் உள்ளனர். எனவே பாகிஸ்தான் அனைத்து பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்க இஸ்லாமை ஒரு மூகமூடியாக பயன்படுத்துகிறது. இதை தான் கடந்த 75 ஆண்டுகளாக அவர்கள் இந்தியாவுக்கு எதிராக செய்து வருகின்றனர்''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+