ஓசியில் ஏறி சம்பவம் செய்த நபர்.. ஒட்டுமொத்த பயணிகளும் அலறல்.. வந்தே பாரத் ரயிலில் ஷாக்.. என்னாச்சு
ஐதராபாத்: ஆந்திராவில் வந்தே பாரத் ரயிலுக்குள் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர், ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள் தெரியாமல் செய்த ஒரு செயல் ஒட்டு மொத்த ரயில் பயணிகளையும் அதிரவைத்துவிட்டது. இதனால் ரயிலும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் ரயில் பயணிகளை கவரும் விதமாக மேம்படுத்தபட்ட சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இதுவரை நாடு முழுவதும் 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் பல வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரையும், சென்னையில் இருந்து கோவை வரையும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை - நெல்லை இடையேயான வழித்தடத்திலும் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. சாய்வு இருக்கைகள், விசாலமான ஜன்னல்கள், பயோ டாய்லட், வைஃபை வசதி என ரயில்களில் வசதியை அடுக்கிக் கொண்டே போகலாம். சாதாரண வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் நேரமும் ஓரளவுக்கு இந்த ரயிலில் பயணம் செய்வதால் மிச்சமாகும்.

அதுபோக பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டதாகவும் தீ விபத்து ஏற்படால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதி உள்ளிட்ட தீ தடுப்பு அம்சங்களும் உள்ளது. வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டதில் இருந்தே அடிக்கடி செய்திகளில் அடிபட்டு கொண்டே இருக்கிறது. ரயில்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவது... ரயில்களில் கல் வீச்சு சம்பவங்கள்... செல்பி எடுக்க ஆசைப்பட்டு ரயிலுக்குள் மாட்டிக்கொண்டது என அவ்வப்போது வந்தே பாரத் ரயில்களில் எதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்த நிலையில் தான், வந்தே பாரத் ரயிலுக்குள் டிக்கெட் எடுக்காமல் ஏறி ஒருவர் செய்த காரியம் ஒட்டுமொத்த பயணிகளையும் அலற வைத்துவிட்டது. அதுகுறித்த விவரத்தை பார்ப்போம்:- திருப்பதியில் இருந்து செகந்திரபாத்திற்கு வந்தே பாரத் ரயில் வழக்கம் போல் சென்று கொண்டு இருந்தது. ரயில் குண்டூர் ரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது வந்தே பாரத் ரயிலுக்குள் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர் ஒருவர், டாய்லட்டிற்குள் சென்று பூட்டிக்கொண்டார்.

டாய்லடிற்குள் இருந்தபடி சிகரெட்டை பற்ற வைத்துள்ளர். ரயிலிலும் தீ விபத்துக்களை ஏற்படுத்தும் பாதுகாப்பு அம்சம் இருப்பது தெரியாமல் அவர் சிகரெட்டை பற்ற வைக்கவும், ரயிலில் தானியங்கி எச்சரிக்கை ஒலி செயல்பட ஆரம்பித்து விட்டது. அதேபோல தீ தடுப்பு கருவிகளும் செயல்பட தொடங்கிவிட்டன. ரயில் பெட்டி முழுவதும் தீ தடுப்பு கருவி ஏரோசோலை தெளிக்க ஆரம்பித்து விட்டது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக எமர்ஜென்சி எண்ணை தொடர்பு கொண்டு ரயிலில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயில் அவசர அவசரமாக மனுபுலு ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரயில்வே போலீசார், கழிவறைக்குள் தீ பிடித்து விட்டதாக நினைத்து தீ அணைக்கும் கருவியை வைத்து கொண்டு டாய்லட் ஜன்னலை உடைத்தனர். ஆனால், உள்ளே ஒருவர் புகை பிடித்தபடி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ரயிலில் இருந்து இறக்கி விட்டதோடு கைது செய்தனர். பின்னர் வழக்கம் போல ரயில் புறப்பட்டு சென்றது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications