செருப்பு இல்லாமல் வெறும் காலில் பெண்களை கண்ட பவன் கல்யாண்.. மொத்த கிராமத்திற்கும் இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், விசாகப்பட்டினம் அருகே உள்ள அரக்கு மற்றும் தும்பிரிகுடா மலைப்பகுதி கிராமங்களுக்கு சமீபத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது உள்ளூர் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்ள பெடபாடு கிராமத்திற்குச் சென்றார். அங்கு வயதான பெண்மணி உள்பட பலர் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் இருந்தனர். இதை பார்த்த பவன் கல்யாண். அந்த மொத்த கிராமத்திற்கும் செருப்புகளை அனுப்பி வைத்தார்.

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், விசாகப்பட்டினம் அருகே உள்ள அரக்கு மற்றும் தும்பிரிகுடா மலைப்பகுதி கிராமங்களுக்கு சமீபத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைக் கிராமமான பெடபாடு கிராமத்துக்குச் சென்றார். அப்போது கிராமத்திற்குள் பவன் கல்யாண் சென்றபோது, பாங்கி மிது என்ற வயதான பெண்மணியும், கிராமத்தைச் சேர்ந்த பல பெண்களும் வெறுங்காலுடன் இருப்பதைக் கவனித்தார்.

Pawan Kalyan saw women in bare feet without shoes A pleasant surprise for the entire village

இதனால் மிகவும் வேதனை அடைந்த துணை முதல்வர் கல்யாண், கிராமத்தில் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். சுமார் 350 பேர் வசிக்கிறார்கள் என்பதை அறிந்ததும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் காலணிகளை வழங்கி விநியோகிக்க தனது அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி மொத்த கிராமத்திற்கும் செருப்புகளை துணை முதல்வர் பவன் கல்யாண் அனுப்பி வைத்தார்.

இதை பார்த்த கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பவன் கல்யாணுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். "எங்கள் பவன் ஐயா வந்து எங்கள் போராட்டங்களை அங்கீகரித்து விட்டார்," என்று ஒரு கிராமவாசி ஒருவர் உணர்ச்சி பொங்க கூறினார். வேறு எந்தத் தலைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தவில்லை என்றும், தங்கள் கிராமத்திற்குச் சென்று தங்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்ததற்காக துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கிராம மக்கள் கூறி நெகிழ வைத்தனர். பெடபாடு கிராம மக்களுடன் சேர்ந்து, முழு தும்பிரிகுடா மண்டலத்தில் உள்ள பலரும் பவன் கல்யாணுக்கு தங்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்து வருகிறார்கள். பவன் கல்யாணின் இந்த செயல் ஆந்திரா முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது.

பவன் கல்யாண் கடந்த மாதம் பழனிக்கு வந்த போது, பழனியில் இருந்து தினமும் திருப்பதிக்கு பேருந்து சேவை குறித்து சில செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படியே அடுத்த சில நாளில் பழனியில் இருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முன்னதாக கடந்த வாரம் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்தது. வக்பு சட்டத்திற்கு வாக்களிக்குமாறு கட்சியின் எம்பிக்களுக்கு பவன் கல்யாண் அப்போது உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+