எப்புட்றா..பெட்ரோல் டேங்கில் காதலியை உட்கார வைத்து.. நடுரோட்டில் முகம் சுளிக்க வைத்த காதல் ஜோடி!
ஹைதராபாத்: ஆந்திராவில் காதல்ஜோடி ஒன்று பைக்கில் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் ஆபத்தான பயணத்தையும் மேற்கொண்டது சமூக வலைத்தளங்களில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து வண்டி எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெய்வீகமானது காதல் என்று சொல்வதுண்டு. எத்தனையோ காதல் ஜோடிகள் கண்ணியமாக நடந்து கொண்டாலும் சில காதல் ஜோடிகள் பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் சில்மிஷங்களிலும் சல்லாபங்களிலும் ஈடுபட்டு பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொள்வதுண்டு.
பீச்சுகள், பொழுது போக்கு பூங்காக்களில் சில காதல் ஜோடிகள் நடந்து கொள்ளும் விதம், என்னம்மா இப்படி பண்றீங்களேமா... என்று தலையில் அடித்துக்கொள்ளாத அளவுக்கு இருக்கும்.

ஒரு வரைமுறை வேண்டாமா?
அதுபோலத்தான் ஆந்திராவில் ஒரு காதல் ஜோடி பைக்கில் செல்லும் போது நடந்து கொண்ட விதம்.. காதல் ஜோடிகள் என்றால் ஒரு வரைமுறை வேண்டாமா? என்று எண்ணும் அளவுக்கு உள்ளது. இத்தனைக்கும் சீருடையில் இந்த ஜோடி இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.. இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் வருமாறு;- பல்சர் பைக் ஒன்றில் பெட்ரோல் டேங்கில் மாணவி ஒருவரை உட்கார வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தார்.

பெண்ணுக்கு உடல் நிலை எதுவும் சரியில்லையோ
தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் முதலில் கல்வி நிறுவன சீருடையில் இருந்த பெண்ணுக்கு உடல் நிலை எதுவும் சரியில்லையோ.. அதனால் தான் தாங்கி பிடித்தபடி ஓட்டுகிறரோ... என்று எண்ணினனர். ஆனால், நெருங்கி பார்த்த போதுதான் பைக்கில் செல்லும் போது கூட மிகவும் ஆபாசமான முறையில் அமர்ந்து கொண்டு சல்லாபத்துடன் இந்த காதல் ஜோடி பயணித்தது தெரியவந்தது. இதைப் பார்த்து திடுக்கிட்ட வாகன ஓட்டிகள் பலரும் இப்படி ஆபத்தை உணராமல் வாகனம் ஓட்டிக்கொண்டு செல்கிறார்களே என்று முனுமுனுத்துக் கொண்டும் சென்றனர்.

இணையத்தில் பரவிய வீடியோ
வாகன ஒட்டி ஒருவர் இந்த ஜோடி பைக்கில் சென்ற காட்சிகளை படம் பிடித்துள்ளார். இந்தக் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவியது. இதைப் பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்ததோடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். இப்படி ஆபத்தான பயணத்தின் மூலம் தங்களுக்கு ஆபத்தை தேடிக்கொள்வதை விட எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணிக்கிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து இருந்தனர்.

இணையத்தில் பரவிய வீடியோ
வாகன ஒட்டி ஒருவர் இந்த ஜோடி பைக்கில் சென்ற காட்சிகளை படம் பிடித்துள்ளார். இந்தக் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவியது. இதைப் பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்ததோடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். இப்படி ஆபத்தான பயணத்தின் மூலம் தங்களுக்கு ஆபத்தை தேடிக்கொள்வதை விட எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணிக்கிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து இருந்தனர்.

போலீசார் விசாரணை
காதல் ஜோடி இப்படி பைக்கில் சென்ற உல்லாச பயணம் கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், வீடியோ பதிவை ஆதராமாக கொண்டும், பல்சர் பைக்கின் நம்பரை கொண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். காதல் எனும் புனிதத்தை இதுபோன்ற செயலில் ஈடுபட்டு சிலர் கெடுத்துவிடுவதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் ஆலை சாலையில் தான் இந்தக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications