ஆஜரான பிரகாஷ் ராஜ்.. துருவி எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்! சூதாட்ட செயலி வழக்கில் கிடுக்குப்பிடி
ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பல பிரபலங்களுடன் சேர்த்து, சட்டவிரோத சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததாக பிரகாஷ் ராஜ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
விசாரணையின் போது, தான் ஒரு ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், ஆனால் அதன் செயல்பாடுகள் குறித்து கவலைகள் எழுந்ததால் 2017 ஆம் ஆண்டிலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும் பிரகாஷ் ராஜ் விளக்கமளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற சட்டவிரோத செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லக்ஷ்மி உட்பட சுமார் 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ராணா டகுபதி கடந்த ஜூலை 23 அன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், திரைப்படப் பணிகளைக் காரணம் காட்டி அவகாசம் கோரியுள்ளார். விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், மஞ்சு லக்ஷ்மி ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை இந்த வழக்கை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது. சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications