கை உடைஞ்சி கட்டு போட்டும் திருந்தாத சிறை கைதி ஸ்ரீகாந்த்! ஆஸ்பத்திரியில் காதலியுடன் உல்லாசம்!
ஹைதராபாத்: கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வேண்டும் என சொல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறை கைதி ஒருவர் (Prisoner Srikanth) தனது காதலியுடன் உல்லாசமாக சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் மதுக்கடை மேலாளரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் 2010ஆம் ஆண்டு முதல் நெல்லூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி சிறையில் இருந்து ஸ்ரீகாந்த் தப்பிய நிலையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் பிடிபட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்ரீகாந்த் அண்மையில் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அப்போது நெல்லூர், திருப்பதி மாவட்ட எஸ்பிக்களும் நெல்லூர் சிறை கண்காணிப்பாளரும், ஸ்ரீகாந்துக்கு பரோல் கொடுத்தால் அவர் வெளியே வந்து கடுமையான குற்றங்களைச் செய்யக் கூடும் என கூறி அவருக்கு பரோல் வழங்குவதை எதிர்த்தனர்.
நெல்லை மாவட்ட சிறை அதிகாரிகளால் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய போது அவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதனால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் ஸ்ரீகாந்த்தை மீண்டும் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விதிகளின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது யாரும் அவரை சந்திக்காமல் பார்த்துக் கொள்வது போலீஸாரின் கடமையாகும். ஆனால் ஸ்ரீகாந்த் சிறையில் இருப்பதால் அவரது கும்பலை அவரது காதலி அருணாதான் பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அவர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுக்கும் பணியையும் அருணா செய்து வருகிறாராம்.
இந்த நிலையில் ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அருணா, மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தனது காதலனை கண்டதும் அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையடுத்து அவரது பரோல் ரத்து செய்யப்பட்டது. ஸ்ரீகாந்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும், தலைமைச் செயலக அதிகாரிகளும்தான் பரோல் கிடைக்க உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.












Click it and Unblock the Notifications