ராகுல் இதை பண்ணியிருந்தால் இப்படி பேச மாட்டாங்க! தயாநிதி மாறன் பேச்சு குறித்து பிஆர்எஸ் கவிதா தாக்கு
ஐதராபாத்: இந்துக்களுக்கும் இந்தி பேசும் மாநில தொழிலாளர்களுக்கும் எதிரானவர் இல்லை என்பதை இந்த தேசத்திற்கு ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் கவிதா கூறியுள்ளார்.
திமுக எம்பி தயாநிதி மாறன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பாஜகவினரால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில் தயாநிதி மாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தயாநிதி மாறன் கூறுகையில், "இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள், சாலைகள், கழிவறைகளை சுத்தம் செய்வதில் தான் ஈடுபடுகிறார்கள்.

ஆங்கிலம் தெரிந்ததால் தான் நமது இளைஞர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே.. அவர்கள் நிலையைப் பாருங்கள். இன்று கட்டிடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை கற்று இங்கேயே வீடு கட்டி தங்குகிறான்.
காங்கிரசுக்கு நெருக்கடி: சாலையைச் சுத்தம் செய்கிறான். டாய்லெட் கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை'' எனக் கூறியிருந்தார். தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றாக திமுக உள்ள நிலையில், அந்தக் கட்சியினர் இந்தி பேசும் மாநிலங்களுக்கு எதிராக பேசும் இந்தக் கருத்துக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பிக்களின் இந்த பேச்சுக்களை வைத்துக் கொண்டு பாஜக அரசியல் ரீதியாக இந்தியா கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. தற்போது இந்த கோதாவில் தெலுங்கனாவில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்த பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியும் இறங்கியுள்ளது. சந்திரசேகர் ராவின் மகளும் தெலுங்கானா எம்.எல்.சியுமான கவிதா, ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார்.
ஒற்றுமை குறித்து பேசி வந்தார்: இது தொடர்பாக கவிதா கூறியிருப்பதாவது:- இது ஒரு கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாதிரியான அறிக்கைகள் நமது தேசத்தின் கட்டமைப்பை எவ்வாறு சீர்குலைக்கப் போகிறது என்பதை பற்றியது. ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் இந்தியா கூட்டணியில் அந்தக் கட்சி அங்கம் வகிக்கிறது. ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது தொடர்ந்து தேச ஒற்றுமை குறித்து பேசி வந்தார்.
ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்: தற்போது அதை வெறும் ஸ்டண்ட் போலத்தான் தெரிகிறது. ஏனெனில், இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் சனாதன தர்மம் குறித்து பேசிய போது ராகுல் காந்தி எதிர்த்து இருக்க வேண்டும். சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு ராகுல் காந்தி கருத்து கூறியிருந்தால் இதுபோன்ற கருத்துக்களை வேறும் யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
அத்தகைய பேச்சுக்களை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நான் இந்துக்களுக்கும் இந்தி பேசும் மாநில தொழிலாளர்களுக்கு எதிரானவன் இல்லை என்பதையும் இந்த தேசத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்" இவ்வாறு கவிதா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications