தெலுங்கானாவில் தேர்வு மையம் முதல் ஆர்ஆர்பி தேர்வு மையம் ரத்து வரை! தமிழர்களை அலைக்கழிக்கும் ரயில்வே?
ஹைதராபாத்: ரயில்வே தேர்வாணையத்தின் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து தெலுங்கானா மாநிலம் சென்ற தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட், அதாவது ரயில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 2ஆம் நிலை தேர்வு இன்று நடைபெறும் என அறவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தமிழக தேர்வர்களுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையம் போட்டியிருப்பதாக தமிழக தேர்வர்கள் குற்றம்சாட்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் போராடியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தேர்வு தேதியும் வந்துவிட்டது. மத்திய அரசு வேலையாயிற்றே என பலர் நேற்றே செலவு செய்து தேர்வு மையத்தின் அருகே உள்ள விடுதிகளில் தங்கி இன்று இரு ஷிப்ட்களாக நடத்தப்படும் தேர்வுகளுக்கு சென்றிருந்தனர்.
அப்போது அந்த மையங்களில் இன்று நடைபெறவிருந்த ரயில்வே தேர்வாணைய தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நடத்தப்படும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும். இதற்காக ரயில்வே தேர்வாணைய இணையதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்வு ரத்து
இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு ரத்து என்பதை முன்கூட்டியே சொல்லாமல் திடீரென என சொன்னால் என்ன அர்த்தம் என மாணவர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் பல ஆயிரம் கி.மீ. பயணம் செய்து ஏற்கெனவே செய்யும் பணிகளுக்கு விடுப்பு பெற்று வந்திருக்கும் போது இப்படி அலைக்கழிப்பதா என மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து விசாரித்தபோது தொழில்நுட்ப கோளாறு என்பதால் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார்கள் என வேதனையுடன் மாணவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே தமிழர் திருநாளன்று பல்வேறு தேர்வுகளை திட்டமிட்ட மத்திய அரசு பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு அந்த தேதியை மாற்றியமைத்தது.
சு வெங்கடேசன்
இந்த நிலையில் இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இந்த கடிதத்தை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டருக்கும் ரயில்வே துறையின் பொது மேலாளரின் ட்விட்டருக்கும் டேக் செய்துள்ளார்.இந்தியாவிலேயே அதிக கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் 6000 பேருக்கு தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல.
ஒரே அமர்வு
ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் திருமிகு பிரதிபா யாதவ் அவர்கள், நான் CBT 2 தேர்வு மையங்கள் வெளி மாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் CBT 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?
வெளிமாநிலங்கள்
இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன்! உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலாயில் தொடர்ந்து தமிழர்கள் தேர்வு தேதிகளிலும் தேர்வை ரத்து செய்தும் மத்திய அரசு வஞ்சிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications