ஹிஜாப்பை கழற்று.. முகத்தை காட்டு.. இஸ்லாமிய பெண் வாக்காளர்களை சோதித்த பாஜக வேட்பாளர் மாதவி.. ஷாக்
ஹைதராபாத்: லோக்சபா 4ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா 'சரிபார்த்த' சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக இந்து - முஸ்லீம் இடையே பிரிவினை தொடர்பான கருத்துக்களை தீவிரமாக பேசி வருகிறது. கடந்த தேர்தல்களில் அடிமட்ட அளவில் பேசப்பட்ட கருத்துக்கள் இந்த முறை மேல்மட்ட அளவில் பேசுபொருளாகி உள்ளது.

உதாரணமாக பிரதமர் மோடியே இந்த முறை இஸ்லாமியர்கள் குறித்து மேடைக்கு மேடை பேசும் நிலை ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு கொடுக்க போகிறது,. உங்கள் வேலை போக போகிறது , ராமர் கோவிலை மூட போகிறார்கள், உங்கள் வீட்டு மாடுகளை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க போகிறார்கள் என்றெல்லாம் மோடி பேசி வருகிறார்.
சில கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளில் இல்லாததை கூட இருப்பதாக கூறி மோடி பேசி வருவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மோடியே இப்படி பேசுவதால் கீழ் மட்டத்திலும் நிர்வாகிகள் கடுமையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர்.
தெலுங்கானா தேர்தல்: அதிலும் தெலுங்கானா தேர்தலிலும் இந்து - முஸ்லீம் என்று நேரடியாக பாஜக narrative set செய்தது. அதிலும் தெலுங்கானா லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஹைதராபாத் வேட்பாளர் கே.மாதவி லதா செய்த பிரச்சாரங்கள்தான் அங்கே தேர்தல் பேசுபொருளாக.. தேர்தலின் மையமாக மாறியது. இஸ்லாமியர்களை நேரடியாக தாக்கி அவர் பேசிய விஷயங்கள் எல்லாம் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது.
பாஜக ஹைதராபாத் வேட்பாளர் கே.மாதவி லதா: சமீபத்தில் கூட பாஜகவின் ஹைதராபாத் வேட்பாளர் கே மாதவி லதா மசூதியை நோக்கி அம்பு எய்த சைகை காட்டியது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. அவர் இஸ்லாமியர்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பாக ஹைதராபாத்தில் ஓவைசி போட்டியிடுகிறார். அதே தொகுதியில் மாதவி லதா போட்டியிடுகிறார்.
சோதனை; இந்த நிலையில்தான் இன்று லோக்சபா 4ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா 'சரிபார்த்த' சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்க சொல்லி.. முகத்தை காட்டு என்று இவர் மிரட்டி உள்ளார்.
அவர்களை மிரட்டி முகத்தை பார்த்த பின்பே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும் கூட வேடிக்கை பார்த்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளும் இதை வேடிக்கை பார்த்து உள்ளனர். அங்கே இருந்த இஸ்லாமிய பெண்கள் எல்லோரையும் பெயரை கேட்டு, ஆதாரில் உள்ள போட்டோவை பார்த்து பின்னர் அவர்களின் முகத்தை ஹிஜாப்பை தூக்கி காட்ட சொல்லி அதன்பின்பே அனுமதித்தார்.
இன்று தேர்தல்; நாடு முழுக்க லோக்சபா 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதில் தெலுங்கானாவில் 17 தொகுதிகளில் நடக்கிறது. ஜார்கண்டில் மாநிலத்தின் 14 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ஒடிசாவில் மாநிலத்தின் 21 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் மாநிலத்தின் 80 தொகுதிகளில் 13 தொகுதிகளில் நடக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் மாநிலத்தின் 29 தொகுதிகளில் 8 தொகுதிகளில் நடக்கிறது. பீகாரில் 40 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில் மாநிலத்தின் 48 தொகுதிகளில் 11 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் 42 தொகுதிகளில் 8 தொகுதிகளில் நடக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஐந்து தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டும் இன்று தேர்தல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications