அன்று எம்எல்ஏவாக ரேவந்த் ரெட்டி சொன்னது.. இன்று முதல்வரானதும் நாகர்ஜுனாவின் கட்டிடம் இடிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஏரியில் அமைந்திருந்த நாகர்ஜுனாவின் பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தை ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி இன்று இடித்து அகற்றி உள்ளனர். இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு பற்றி பல வருடங்களுக்கு முன்பே தெலுங்கு தேசம் கட்சியில் எம்எல்ஏவாக இருந்த போதே இன்றைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். இன்று அவரே முதல்வராக வந்து இடித்துள்ளார்.
ஹைதராபாத்தின் மாதாப்பூரில் தான் ஆயிரக்கணக்கான ஐடி நிறுவனங்கள் உள்ளன. கூகுள் நிறுவனம், பேஸ்புக் நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்பட புகழ் பெற்ற பல்வேறு ஐடி நிறுவனங்கள் இங்கு தான் அமைந்துள்ளன. ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி ஹைடெக் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. பெங்களூரில் எப்படி எலக்ட்ரானிக்ஸ் சிட்டியோ,சென்னையில் எப்படி தரமணியோ அதுபோல் ஹைதரபாத் ஹைடெக் சிட்டி ஒருங்கிணைந்த ஆந்திர மக்களுக்கு ஐடி தலைநரகமாகும்.

இந்த ஹைடெக் சிட்டியை ஒட்டியுள்ள நிலங்களின் மதிப்பு பல கோடியாகும். இங்கு 29 ஏக்கர் பரப்பளவில் தம்மிடி குந்தா ஏரி தற்போது அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 3.30 முதல் 3.40 ஏக்கர் ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா மண்டபம் கட்டியிருந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளது. இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவாக ரேவந்த் ரெட்டி இருந்த போது சட்டசபையில் பேசியிருக்கிறார்.
அப்போது அவர் கூறுகையில், ஹைதராபாத் ஹைடெக் சிட்டி எதிரே நடிகர் நாகர்ஜூனா ஏரியை ஆக்கிரமித்து என் கன்வின்சன் ஹால் என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக செய்திகள், ஊடகங்கள் மற்றும் செய்திதாள்களில் வந்துள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இப்படி ரேவந்த் ரெட்டி கூறி பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது அவரே தெலுங்கானா முதல்வர் ஆன நிலையில், ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து தம்மிடி குந்தா ஏரி சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வருவாய், நீர்ப்பாசனம் மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஹெச்எம்சி) குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அதிகாரிகள் நாகர்ஜுனா கட்டிய மண்டபம் அமைந்துள்ள இடம் 6.69 ஏக்கர் என்பதையும், அதில் சுமார் 3.30 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர். இதனை இடித்து அகற்றவும் முடிவு செய்தனர்.
இதன்படி காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன், ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகள் இன்று அதிகாலையிலேயே சென்றனர். சர்ச்சைக்குள்ளான என் கன்விக்சன் மண்டபத்தை இன்று இடித்து அகற்றினர். இந்த விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல வருடம் முன்பு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் கூறிய ரேவந்த் ரெட்டி, இன்று இடித்த நாகர்ஜுனாவின் திருமண மண்டபத்தில் தான் தனது மகளின் திருமண நிச்சயதார்த்தையே (2015ம் ஆண்டு) நடத்தினார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications