2 ஃபேன், பல்புக்கு ரூ.11 கோடி கரண்ட் பில்லா.. ஷாக் அடிக்கும் கட்டணம்! மிரண்ட கிராம மக்கள்! என்னாச்சு

சிறிய கட்டிடத்திற்கு 11 கோடி ரூபாய் பில் வந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஃபேனும் லைட்டும் மட்டும் இருக்கும் கட்டிடத்திற்கு 11 கோடி ரூபாய் பில் வந்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எப்போதும் மின்சாரத்தைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும்.. ஆனால், சில சமயங்களில் மின்வாரியத்தின் நடவடிக்கைகளே நமக்கு ஷாக் அடிப்பதாக அமைந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானாவில் இருக்கும் சின்ன கிராமம் ஒன்றில் வசிக்கும் நபருக்குச் சென்ற மின் கட்டணத்தைப் பார்த்து அவர் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். என்ன நடந்தது.. அவருக்குச் சென்ற மின் கட்டணம் எவ்வளவு.. அது குறித்து விரிவான தகவல்களை நாம் பார்க்கலாம்.

 மின்சார பில்

மின்சார பில்

நமது மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை மாதம் ஒரு முறை என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதேநேரம் மாநிலத்தில் ஏற்கனவே பல மாநிலங்களில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்ற முறையில் அமலில் இருக்கிறது. அதன்படி நமது அண்டை மாநிலமான தெலங்கானாவில் இப்போது மாதம் ஒரு முறை தான் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 11.41 கோடி

11.41 கோடி

இதற்கிடையே தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ரூ.11.41 கோடி மின்கட்டணம் வந்ததால், அந்த கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கமரெட்டி மாவட்டத்தில் உள்ள கொத்தப்பள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஜனவரி மாத மின் கட்டணமாக ரூ.11.41 கோடி வந்துள்ளது.. இது மின்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கைக் காட்டுவதாக உள்ளது

 அதிர்ச்சியில் மக்கள்

அதிர்ச்சியில் மக்கள்

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 11,41,63,672 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இது கிராம மக்களுக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த கட்டிடத்தில் இருப்பதே ஃபேனும் லைட்டும் தானாம். அப்படியிருக்கும் போது ஒரு மாதத்திற்கு எப்படி இவ்வளவு அதிக மின் கட்டணம் வந்தது என்று தெரியாமல் அவர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கக் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் சென்றுள்ளார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

எப்படி அந்த சின்ன கட்டிடத்திற்கு அதுவும் ஒரு மாதத்திற்கு இத்தனை அதிக மின் கட்டணம் வரும் என்று கேட்டுள்ளனர். தொழில்நுட்ப காரணங்களால் இதுபோன்ற தவறு நடந்துவிட்டதாகவும் மீண்டும் மீட்டர் ரீடிங்கை சரிபார்த்து பில் தொகையைக் கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பின்னரே கிராமத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். ரீடிங் எடுக்க வந்த நபர் செய்த தவறாலே இந்தளவுக்கு அதிக மின் கட்டணம் வந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

அதேநேரம் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2022 ஜூலை மாதம் குவாலியரில் வசிக்கும் ஒருவர் 3,419 கோடி ரூபாய்... ஆம் நீங்கள் படித்தது சரி தான்.. 3,419 கோடி ரூபாய் மின் கட்டணம் சென்றுள்ளது. இதைப் பார்த்து வீட்டில் இருந்த முதியவருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ரீட்டிங் எடுக்கச் சென்றவர் செய்த பிழையால் இதுபோல அதிக மின் கட்டணம் வந்துவிட்டதாகத் தெரிவித்த அம்மாநில அரசு, பின் திருத்தப்பட்ட மின் கட்டணமாக ₹ 1,300ஐ வழங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+