சாக்லேட் எடுக்க பிரிட்ஜை தொட்ட 4 வயது குழந்தை.! ஷாக் அடித்து பறிபோன உயிர்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுக்க பிரிட்ஜை திறந்த 4 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாம் குழந்தையை எங்கு அழைத்துச் சென்றாலும் கண்ணும் கருத்துமாக அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் எங்கு எந்த இடத்தில் ஆபத்து இருக்கும் என்றே தெரியாது.

எஸ்கிலேட்டர் தொடங்கிப் பல இடங்களில் இதுபோன்ற ஆபத்துகள் மறைந்து இருக்கிறது. அப்படி தான் ஹைதராபாத்தில் சாக்லேட் எடுக்கச் சென்ற குழந்தை திடீரென ஷாக் அடித்து உயிரிழந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
4 வயதுக் குழந்தை: நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாமாபாத் நந்திப்பேட்டையில் நடந்துள்ளது. அங்கே உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் சாக்லேட் எடுக்க பிரிட்ஜை திறந்த நான்கு வயதுக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அரங்கேறியுள்ளது. நந்திப்பேட்டையில் உள்ள என் சூப்பர் மார்கெட் என்ற இடத்தில் நடந்த இந்த கொடூரத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த நவிப்பேட்டையை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்.. இவர் தனது 4 வயது மகள் ருஷிதாவுடன் மளிகைப் பொருட்கள் வாங்கு அங்குள்ள இந்த சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். அங்கே தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பிரிட்ஜில் இருக்கும் சாக்லேட்டை குழந்தை எடுக்க அதன் கதவைத் திறக்க முயல்வதும் அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் குழந்தையின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
கொடூரம்: இதனால் ஷாக் அடித்த அந்த குழந்தை சில அந்த கதவில் அப்படியே சிக்கிக் கொண்டது. முதலில் குழந்தையின் தந்தை ராஜசேகர் இதைக் கவனிக்கவில்லை. சில நொடிகளுக்குப் பின்னரே இதைக் கவனித்த ராஜசேகர், பதயறியடித்து கொண்டு குழந்தையை வந்து தூக்கியுள்ளார். இருப்பினும் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே அதற்குள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சூப்பர் மார்கெட்டில் எடுக்கப்பட்ட அந்த சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த குழந்தையும் தந்தையும் சூப்பர் மார்கெட்டில் ஷாப்பிங் செய்வது தெளிவாகத் தெரிகிறது. அப்போது அவரது தந்தை பிரிட்ஜ் ஒன்றில் இருக்கும் எதையோ மும்முரமாகத் தேடி வருகிறார். அப்போது அவரது வலதுபுறத்தில் இருக்கும் பிரிட்ஜை அந்த சிறுமி திறக்க முயல்வது தெரிகிறது. அப்போதுதான் மின்சாரம் தாக்கி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழக்கிறது.

கதறிய தந்தை: இருப்பினும், இதைக் கவனிக்காத அந்த தந்தை பிரிட்ஜ்ஜில் என்ன இருக்கிறது என்பதைத் தேடி வருகிறார். தனக்கு வேண்டியது எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகரும் போதே என்ன நடந்தது என்பதை உணர்ந்துள்ளார். இதையடுத்து கையில் இருந்த பொருட்களை அப்படியே போட்டுவிட்டு, பதறியயடித்து கொண்டு குழந்தையைத் தூக்குகிறார்.
உடனடியாக அங்கே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கே குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தின் அலட்சியமே தங்கள் மகளின் மரணத்திற்குக் காரணம் என்று அந்த குழந்தையின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வழக்குப்பதிவு: இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் குடும்பத்திற்கு ஆதரவாக அங்குத் திரண்ட பொதுமக்கள் சூப்பர் மார்கெட் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் ஐபிசியின் 304(2) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஷாப்பிங் மார்கெட் என்று இல்லை எங்குக் குழந்தைகளுடன் சென்றாலும் நாம் எந்தளவுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications