Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா 6 வாக்குறுதி.. தெலுங்கானாவில் பிரம்மாஸ்திரம் எடுக்கும் காங்கிரஸ்! சோனியாவுக்காக வெயிட்டிங்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான 6 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று வெளியிட உள்ளார்.

தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சிகாலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து 119 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sonia Gandhi is going to announce 6 promises for the Telangana assembly elections

இந்த தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட உள்ளன. இந்த முறை காங்கிரஸ், பி.ஆர்.எஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து இருக்கிறது.

அதில் குறிப்பாக கர்நாடக தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுத்த திட்டங்களை தெலுங்கானாவிலும் அக்கட்சி பயன்படுத்த இருக்கிறது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற உதவிய திட்டங்கள் என்னவென்று கண்டறிந்து அதன் அடிப்படையில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தின் விஜய பேரியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி கலந்துகொள்ள உள்ளார்.

இந்த கூட்டத்தில் ஆறு முக்கிய தேர்தல் உத்தரவாதங்களை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த வாக்குறுதிகள் தெலங்கானா மாநில தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அடிப்படையாக அமையும். அதே நேரம் தெலங்கானா மாநிலத்திற்கு அறிவிக்கப்படும் 6 உத்தரவாதங்களும் கர்நாடகாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவாதங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டினர்.

மக்களுக்கு வலுவான நம்பிக்கையை வழங்கும் வகையில் முக்கிய வாக்குறுதிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அந்த திட்டங்கள் மாநில தேவைகளுக்கு ஏற்ப தனித்துவமான அணுகுமுறையுடன் இருக்கும் என்றும், முழுக்க முழுக்க தெலங்கானா மாநிலம் சார்ந்ததாக இருக்கும் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்து உள்ளார்.

சோனியா காந்தி அறிவிக்க உள்ள ஆறு வாக்குறுதிகளில் மூன்று வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ரூ.3,000 உதவி வழங்குவது, ரூ.500 க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் வழங்குவது, மலிவான வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் உதவி ஆகியவை அடங்கும்.

இன்று ஹைதராபாத்தில் காங்கிரஸின் விஜய பேரி கூட்டம் இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டங்கள் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+