Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் மாணவிகள் அருவிக்கு ஜாலி சுற்றுலா.. மகிழ்ச்சியாக குளித்தவர்களின் நிலை.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தகிரி பகுதியின் ஹுகும்பேட்டை மண்டலத்தில் அமைந்துள்ள மலுங்குமி நீர்வீழ்ச்சி, ஆந்திராவில் புகழ் பெற்ற நீர் வீழ்ச்சிகளில் ஒன்று.. இங்கு பலரும் விடுமுறைக்காலங்களில் சுற்றுலா செல்வார்கள்.. அப்படி சுற்றுலா செல்பவர்கள் அங்குள்ள அருவிகளில் குளிப்பார்கள்.. அத்துடன் நீரோடையிலும் குளிப்பார்கள் அப்படி குளித்த 3 மாணவிகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தற்போது கோடைக்காலம் என்பதால் பலர் ஆறுகள் மற்றும் அருவிகள் மற்றும் நீரோடைகளில் சென்று குளிக்கிறார்கள். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் இப்படி தண்ணீரில் குளிக்கும் போது, தவறி விழுந்து இறக்கிறார்கள்.. ஒருவரை தொடர்ந்து இன்னொருவர் அடுத்தது காப்பாற்றும் முயற்சியில் உயிரிழக்கிறார்கள்.

Students in Andhra Pradesh go on a fun trip

அப்படித்தான் ஆந்திரப் பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் மனதை உலுக்கும் சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விடுமுறையைக் கொண்டாட சென்ற நான்கு தோழிகளில் மூவர் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உயிரை இழந்தனர்.

திரிஷ் (17), ரத்னகுமாரி (16), பவித்ரா (16) மற்றும் அஞ்சலி (16) ஆகிய நான்கு சிறுமிகளும், அனந்தகிரி பகுதியின் ஹுகும்பேட்டை மண்டலத்தில் அமைந்துள்ள மலுங்குமி நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தனர்.

அழகிய இயற்கைச் சூழலுக்கு மத்தியில், மலையின் விளிம்பில் நின்று புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். கோடை வெப்பத்தின் காரணமாக, பின்னர் அவர்கள் நீரில் இறங்கி மேலும் மகிழ விரும்பினர்.

அவர்கள் 'செல்ஃபி' எடுத்துக்கொண்டிருந்தபோது அந்தத் துயரம் நிகழ்ந்தது. அச்சிறுமிகளில் ஒருத்தி கால் இடறி நீரில் விழுந்தாள்; அவளைக் காப்பாற்றும் முயற்சியில், மற்ற மூவரும் ஒருவர் பின் ஒருவராகக் கால் இடறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தனர்.

உள்ளூர் மக்கள் உடனடியாகச் செயல்பட்டு, நீரில் குதித்து அவர்களை வெளியே மீட்டனர். இருப்பினும், அதற்குள் திரிஷ், பவித்ரா மற்றும் ரத்னகுமாரி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். அஞ்சலி காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறார்.

உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல், அந்த கிராமத்தையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் ஒரு சோகமான சூழலை உருவாக்கியுள்ளது. குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கினர்; மகிழ்ச்சியுடன் தொடங்கிய அந்தத் தருணங்கள், இறுதியில் ஒரு பெரும் துயரமாக முடிவடைந்தன.

ஆபத்தான பகுதிகளில் செல்லும்போது சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, காவல்துறை ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. செல்ஃபி எடுக்கும்போது காட்டும் கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். நீச்சல் தெரியாதவர்கள் ஆழமான நீரில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தேவைப்படும்போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+