Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹெல்மெட்" உடன் வந்த ஆசாமி.. தெலுங்கானா ராஜ்பவனில் துணிகர கொள்ளை! விசாரணையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் புகுந்த அடையாளம் தெரியாத ஹெல்மெட் ஆசாமி அங்குள்ள ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பத்திற்கு மேல் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாகவே ஆளுநர் மாளிகையில் எப்போதும் பாதுகாப்பு அதிகம் இருக்கும். ஆனால், அந்த பாதுகாப்பை மீறி தெலுங்கானா ராஜ்பவனில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடந்த வாரம் மே 15ம் தேதி காலை அங்கு ஐடி பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது ஐடி ரூமில் கம்ப்யூட்டர் ஆனில் இருந்துள்ளது.

Suspended Employee Arrested for Theft of Sensitive Data at Telangana Raj Bhavan

ராஜ்பவனில் திருட்டு

மேலும், வேறு யாரோ லாகின் செய்தது போலவும் தெரிந்துள்ளது. செக் செய்து பார்த்த போது முக்கியமான டேட்டா இருந்த ஹார்டு டிஸ்க்குகளும் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்துள்ளனர். அப்போது முந்தைய நாள் இரவு ஹெல்மெட் அணிந்த ஆசாமி ஒருவர் ஐடி ரூமில் நுழைந்து ஹார்ட் டிஸ்குகளை திருடிச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ் பவனின் ஐடி பிரிவின் மேலாளர் என். ராகேஷ் மற்றும் உடன் பணிபுரியும் நெட்வொர்க் பொறியாளர் ஸ்ரீ ஸ்ரீராம் ஆகியோர் இது தொடர்பாக அருகே உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் முடிவில் ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியதாகக் கூறி ராஜ் பவன் ஊழியர் ஒருவரையே கைது செய்துள்ளனர். அந்த ராஜ்பவன் ஊழியர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இருப்பினும், ஹெல்மெட் அணிந்து உள்ளே வந்து திருடிச் சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர்.

யார் அந்த ஹெல்மெட் ஆசாமி

இப்போது போலீசார் கைது செய்யப்பட்ட இடைநீக்கம் செய்யப்பட்ட ராஜ்பவன் ஊழியர் 45 வயதான ஸ்ரீநிவாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த மே 13ம் தேதி தான் ராஜ்பவன் பெண் ஊழியர் ஒருவரின் படத்தை மார்பிங் செய்து பரப்பியதாகக் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் அவர் இடைநீக்கமும் செய்யப்பட்ட நிலையில், அவர் இந்த திருட்டைச் செய்துள்ளார்.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

அதாவது கடந்த மே 10ம் தேதி அந்த ராஜ் பவன் பெண் ஊழியர், தனது போட்டோக்களை யாரோ மார்பிங் செய்து பரப்புவதாக பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த மார்பிங் போட்டோ குறித்து அவருக்குச் சொன்ன சக ஊழியர்களில் ஸ்ரீநிவாஸும் ஒருவர். மார்பிங்கும் செய்துவிட்டு, எதுவுமே அறியாதது போல அவரே பெண்ணிடம் போய் பேசியிருக்கிறார்.

என்ன நடந்தது

இது தொடர்பாகப் பெண் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஐபி முகவரியை வைத்து டிரேஸ் செய்ததில் மார்பிங் செய்ததே ஸ்ரீநிவாஸ் என்பது தெரிய வந்தது. அவர் ராஜ் பவனில் ஐடி பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த மே 12ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இருப்பினும், ஜாமீன் பெற்று அவர் வெளியே வந்தார்.

அதேநேரம் அவர் மீது நடவடிக்கை எடுத்த ராஜ்பவன் அவரை சஸ்பெண்ட் செய்தது. சஸ்பெண்ட் உத்தரவு வந்து சில மணி நேரத்தில் ஹெல்மெட் அணிந்து உள்ளே வந்த ஸ்ரீநிவாஸ் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளை அடித்துள்ளார். போலீசார் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+