தெலுங்கானாவில் ஷாக்...சீட்டு கட்டு போல் சரிந்த ஸ்டேடியம்.. கபடி போட்டியை பார்த்த 100 பேர் காயம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட் நகரத்தில் தேசிய ஜூனியர் கபடி போட்டி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மாடம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யாபேட் நகரத்தில் 47வது தேசிய அளவிலான கபடி போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில கபடி அசோசியேன் மற்றும் சூர்யாபேட் மாவட்ட கபடி அசோசியேன் ஆகியவை இனைந்து நடத்தின.
இந்த கபடி போட்டி தொடரை தெலுங்கானா மாநில மின்சார துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, சூர்யாபேட்டில் உள்ள காவலர்கள் மைதானத்தில் தொடங்கி வைத்தார். தெலுங்கானா மாநில விளையாட்டு துறை அமைச்சர் சீனிவாச கௌடா இன்று விளையாட்டு போட்டி நடந்த போது அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

விபத்துக்கு காரணம்
இந்த விளையாட்டு போட்டியை காண 5000க்கும் மேற்பட்டோர் மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்தனர். அதிகப்படியான கூடடத்தினர் அமரந்திருந்ததால் அதிக பாரம் தாங்காமல் கேலரி அடிந்து சரிந்தது. இதனால் இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் அதிகப்படியான கூட்டமே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது என்றார்.

100 பேர் காயம்
காயம் அடைந்த அனைவரும் சூர்யாபேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 20க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் பேர்
உள்ளூர் செய்தியாளர்கள் நிலைமை குறித்து கூறுகையில், மைதானத்தில் மரத்தாலான பலகைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூன்று வெவ்வேறு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் 20 அடி உயரத்திலும் 240 அடி அகலத்திலும் இருந்தன. ஒவ்வொரு கேலரியிலும் மொத்த கொள்ளளவு 1500 ஆகும். இருப்பினும், அதிகப்படியான மக்கள் இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பார்வையாளர்கள் கேலரியை அதன் திறனை விட அதிகமாக ஆக்கிரமித்தததால் அது திடீரென சரிந்து விழுந்தது. என்று கூறினார்கள்.
|
தேசிய போட்டி
தெலுங்கானாவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கபடி போட்டி தொடரில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நான்கு நாட்கள் -நாக் அவுட் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட இருந்தன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications