800 வருடமாக அசைக்க முடியாத "அதிசயம்".. ஒரு மரத்திற்கு இத்தனை கோடி ரூபாயா! அம்மாடி.. அதிசயமா இருக்கே!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இருக்கும் ஆலமரம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த மரத்தை பற்றிய ஆச்சர்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானாவில் உள்ள மகபூப் நகரம் என்ற மாவட்டத்தில்தான் அந்த மரம் இருக்கிறது. இந்த மரம் அந்த பகுதியில் இருக்கும் மிகப்பெரிய ஆழ மரம் ஆகும்.
இதை பிள்ளாலமரி மரம் என்று அழைக்கிறார்கள். அதாவது இதன் அர்த்தம் ஆலமர குழந்தைகள் என்பது ஆகும்.

ஏன் இந்த பெயர்?
இந்த மரத்திற்கு அப்படி பெயர் வர முக்கிய காரணம் இருக்கிறது. பிள்ளாலமரி மரம் என்றால் பிள்ளைகளை பெற்று எடுத்த மரம் என்பது ஆகும். பொதுவாக ஆலமரத்தின் விழுதுகள் விழுந்து அது அருகில் இன்னொரு மரம் போல வளரும். ஆலமரம் பெரிதாக பெரிதாக இப்படி விழுதுகள் விழுந்து அருகே நிறைய ஆலமரம் வளர்வது வழக்கம். அப்படித்தான் இந்த மரத்தில் இருந்தும் நிறைய விழுதுகள் விழுந்து குழந்தைகள் போல வளர்ந்து உள்ளன. இதனால்தான் பிள்ளாலமரி மரம் ஆகும்!

பழமை
இந்த ஆலமரம் 100 வருடம் 200 வருடம் பழமை வாய்ந்தது கிடையாது. இது மொத்தம் 8000 வருடம் பழமை வாய்ந்த மரம் ஆகும். ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய ஆலமரங்களில் ஒன்று ஆகும்.தெலுங்கானாவை பல புயல்கள் தாக்கி உள்ளன. பல மோசமான மழைகள் இந்த மரத்தை தாக்கி உள்ளன. அங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் கூட ஏற்பட்டு உள்ளன. ஆனால் அத்தனையிலும் அந்த மரம் அப்படியே வலுவாக இருந்துள்ளது. கொஞ்சம் கூட அசையாமல் இருந்துள்ளது.

கரையான்
இந்த நிலையில்தான் அந்த மரத்திற்கு வயது ஆக ஆக கரையான் மூலம் பாதிப்பு அடைந்துள்ளது. மரத்தின் அடி பகுதி கரையான் மூலம் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் மரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்த மரத்தை சமீபத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ராஜ்ய சபா எம்பி ஜோகினபலி சந்தோஷ் குமார் பார்வையிட்டார்.

பார்வையிட்டார்
இந்த நிலையில்தான் அந்த மரத்திற்கு தற்போது 2 கோடி ரூபாய் நிதியை அவர் ஒதுக்கி உள்ளார். 800 வருடமாக இந்த மரம் அதிசயமாக நிற்கிறது. இதனால் இந்த மரத்தை காக்க வேண்டும் என்று அவர் இந்த பணத்தை ஒதுக்கி இருக்கிறார். இந்த மரத்திற்கு புதிய பூச்சிக்கொல்லிகள் அடித்து, பூச்சுகள் பூசி, அதை சுற்றி கார்டன் போல அமைக்க இந்த 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த மரத்திற்கு புதிய உயிர் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications