அண்ணாமலையை விட பயங்கரமா யோசிக்கும் தெலுங்கானா பாஜக! 15 நாள் "பஸ்" யாத்திரை போகும் 'தலை'கள்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை அம்மாநில பாஜக தலைவர்கள் மாநிலம் தழுவிய பஸ் யாத்திரை நடத்த உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்திய அரசியலில் ரத யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகளுக்கு பெயர் போன கட்சி பாஜக. 1990களில் அத்வானி நடத்திய ரத யாத்திரைதான் இன்றைக்கு பாஜக மத்தியில் வலுவாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு அடித்தளமானது. ராமர் கோவிலை முன்வைத்து அத்வானி அன்று நடத்திய யாத்திரை இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் தொடர்ந்து யாத்திரை அரசியலை பின்பற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜக தலைவராக எல். முருகன் இருந்த போது வேல் யாத்திரை நடத்தினார். அவரைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளக் கூடிய தெலுங்கானா மாநில பாஜகவும் ஒரு யாத்திரை மேற்கொள்கிறது. ஆனால் இந்த யாத்திரை பாஜக தலைவர்களுடனான பஸ் யாத்திரை என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வரை இந்த பஸ் யாத்திரை நடைபெற உள்ளது. 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி ஹைதராபாத் மாகாணம், இந்தியாவுடன் இணைந்தது. அன்றைய நாளில் இந்த யாத்திரை தொடங்கப்பட உள்ளது.
பத்ராசலம், அடிலாபாத், ஆலம்பூர் ஆகிய இடங்களில் இருந்து இந்த பஸ் யாத்திரை புறப்படும். ஒவ்வொரு பேருந்திலும் 4 தலைவர்கள் இடம்பெறுவர். அவர்களில் ஒருவர் இந்த யாத்திரைக்கு தலைமை வகிப்பர்.
அத்துடன் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 27-ந் தேதி வரை கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலத்தின் 119 எம்.எல்.ஏக்கள் தெலுங்கானா பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர். பாஜக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை இந்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்துவர். இந்த எம்.எல்.ஏக்கள் தரும் அறிக்கைகள் அடிப்படையிலும் வேட்பாளர் தேர்வுகள் நடைபெறுமாம்.
90% சிட்டிங் சீட்.. கேசிஆர் வகுத்த அதிரடி வியூகம்.. தெலுங்கானாவில் பாஜக பிளான் தவிடுபொடி?
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications