90% சிட்டிங் சீட்.. கேசிஆர் வகுத்த அதிரடி வியூகம்.. தெலுங்கானாவில் பாஜக பிளான் தவிடுபொடி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் ஒரு சிறு அதிருப்தியும் வந்துவிடவே கூடாது என்பதற்காக தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 90% பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர முடிவு செய்துள்ளாராம் முதல்வர் கே.சந்திரசேகர ராவ். இதனால் அதிருப்தியாளர்களை இழுக்கும் பாஜக கனவை கலைத்துள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி தங்களை வீழ்த்த காங்கிரஸ், பாஜகவால் முடியவே முடியாது என கெத்துடன் வலம் வருகிறது. ஆனால் எப்படியும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க முடியும் என்ற கனவில் வலம் வருகிறது காங்கிரஸ், பாஜக. இந்த இரு கட்சிகளில் காங்கிரஸ்தான் பிஆர்எஸ் ஆட்சியை வீழ்த்தக் கூடிய வலிமையுடன் இருக்கிறது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜக தேர்தலில் படுபயங்கரமாக விஸ்வரூபம் எடுக்கும் எனவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இதனிடையே தெலுங்கானா தேர்தலில் எப்படியும் சீட் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கையில் முதல்வர் கேசிஆர் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட படங்களுடன் போஸ்டர்களை ஒட்டி 'தேவுடு' காத்து கொண்டிருக்கின்றனர் பிஆர்எஸ் சீனியர் நிர்வாகிகள். ஆனால் முதல்வர் கேசிஆர் வேறு ஒரு கணக்குப் போடுகிறார் என அக்கட்சி வட்டாரங்கள்.
தெலுங்கானா சட்டசபையில் மொத்த இடங்கள் 119. இதில் பிஆர்எஸ் கட்சிக்கு மட்டும் 104 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 104 பேரில் 20 பேருக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டு வந்தது. ஆனால் கேசிஆர் தமது கணக்கை மாற்றிக் கொண்டிருக்கிறாராம். அதாவது சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 90% பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது என முடிவு செய்துள்ளாராம். இதனால் சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 10 பேர் மட்டுமே வேட்பாளராக முடியாமல் போகுமாம்.
அதேநேரத்தில் உங்க சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 104 பேருக்கும் மீண்டும் சீட் கொடுத்து பாருங்க.. தேர்தல் களம் எப்படி புரட்டிப் போடப் போகுதுன்னு தெரியும் என ஏற்கனவே தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, கேசிஆருக்கு சவால் விட்டிருந்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுப்பது என்கிற முடிவில் இருக்கிறாராம் கேசிஆர். இதனால் சில மாவட்டங்களில் அதிருப்தி வெடித்தாலும் சமாளிக்க முடியும் என்பது கேசிஆர் நம்பிக்கையாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications