BRS vs Congress: தெலுங்கானா சட்டசபை தேர்தல்: அனல் பிரசாரம் அத்தனையும் 5 மணியுடன் ஓய்ந்தது!
ஹைதராபாத்: தெலுங்கானா பல மாதங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலுங்கானா சட்டசபைக்கு நாளை மறுநாள் (நவம்பர் 30) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்தில் 2014,2018 சட்டசபை தேர்தல்களில் இன்றைய பிஆர்எஸ் கட்சி - அன்றைய டிஆர்எஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 2 முறை ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி தற்போது 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சொற்பமான இடங்களில்தான் வென்று வந்தது. ஆனால் இம்முறை காங்கிரஸ் விஸ்வரூபம் எடுக்கும்; ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்றன பெரும்பாலான கருத்து கணிப்புகள்.
இந்த இரு கட்சிகளுக்கு இடையே பாஜகவும் களத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டனர். ஆனாலும் பாஜகவுக்கு அதிகபட்சம் 6 இடங்கள்தான் கிடைக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா சட்டசபை தொகுதிகள் மொத்தம் :119
தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்: 60
தெலுங்கானா வாக்காளர்கள்: ஆண்கள் 1,58,71,493 ; பெண்கள் 1,58,43,339;
3-ம் பாலினத்தவர் 2,557
தெலுங்கானாவில் களம் காணும் வேட்பாளர்கள்: 2,290
எல்.பி.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 48 வேட்பாளர்கள் போட்டி
பன்ஸ்வாடா, நாராயண்பேட் தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 7 வேட்பாளர்கள் போட்டி
2014 தெலுங்கானா தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்
பிஆர்எஸ் கட்சி- 99 இடங்கள்
காங்கிரஸ் கட்சி -7 இடங்கள்
ஓவைசி கட்சி- 7 இடங்கள்
பாஜக -1 இடம்
2018 தெலுங்கானா தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்
பிஆர்எஸ் கட்சி- 88 இடங்கள்
காங்கிரஸ் கட்சி -19 இடங்கள்
ஓவைசி கட்சி- 7 இடங்கள்
பாஜக - 5 இடங்கள்
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications