தெலுங்கானா:ஆட்சியை தக்க வைக்க கேசிஆர் பிரம்மாஸ்திரம்!காங்கிரஸ் கனவு துவம்சம்? வருது 'வாக்குறுதி மழை'
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிஆர்எஸ் தலைவரும் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் அதிரடியான வாக்குறுதிகளுடனான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் படுபிஸியாக இருக்கிறார் என்கின்றன தகவல்கள்.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எந்த நிமிடத்திலும் வெளியாகக் கூடும். இன்று இந்திய தேர்தல் ஆணையம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு, ஏற்பாடுகள் குறித்து பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.

ஆட்சிக் கனவில் காங்கிரஸ்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது பிஆர்எஸ் கட்சி. தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியிடம் பிஆர்எஸ் ஆட்சியை பறிகொடுக்கக் கூடும் என்றே கூறி வருகின்றன. ஆளும் பிஆர்எஸ் கட்சி அரசு மீதான அதிருப்தி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கர்நாடகா தேர்தலில் மகத்தான வெற்றிக்கு காரணமான தேர்தல் வாக்குறுதிகளை பட்டி டிங்கரிங் செய்து தெலுங்கானாவிலும் அறிவித்தது காங்கிரஸ். இதனாலேயே காங்கிரஸ் வெற்றி பிரகாசம் என்கின்றன தேர்தல் கருத்து கணிப்புகள்.
மோடியின் இடைவிடாத பிரசாரம்: பிரதமர் மோடியும் தெலுங்கானா மாநிலத்துக்கு இடைவிடாத பிரசாரம் செய்வதற்காக வந்து சென்று கொண்டிருக்கிறார். 3 நாட்களில் 2 முறை தெலுங்கானாவில் பிரசாரம் செய்தார் மோடி. பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார் பிரதமர் மோடி. இது சற்றே சோர்ந்து கிடந்த பாஜகவினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸுக்கு எதிரான வியூகம்: தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் பிஆர்எஸ்/ பாஜக இடையே மோதல் என்ற பிம்பத்தை கட்டமைக்க இரு கட்சிகளுமே பகீரத பிரயத்தனம் செய்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் ரேஸிலேயே இல்லை என்கிற தோற்றத்தை உருவாக்க இரு கட்சிகளும் தீவிரம் காட்டுகின்றன. ஆனால் பந்தயத்தில் முன்னணியில் ஓடுகிற காங்கிரஸ் இதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த ஆட்சி நம்முடையதே என்ற கனவில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்?: இதனால் காங்கிரஸுக்கு கடிவாளம் போடும் வகையிலும் காங்கிரஸின் ஆட்சி கனவை துவம்சம் செய்யும் வகையில் அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளுடனான தேர்தல் அறிக்கை குறித்து படுதீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறாராம் முதல்வர் சந்திரசேகர ராவ். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகிய தரப்புதான் கேசிஆரின் பார்முலாவின் முதன்மை இலக்குகள். முதியோர், பெண்களுக்கான ஓய்வூதியத் தொகையை மேலும் ரூ1,000 அதிகரிப்பது; விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் ஓய்வூதியம்; சமையல் எரிவாயு மானியம் வழங்குவது என்பதெல்லாம் கேசிஆர் முன்வைத்திருக்கும் அஜெண்டாவாம்.
வரப் போகுது முக்கிய அறிவிப்புகள்: அத்துடன் தேர்தல் நெருங்கிவிட்டதால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெட்ரோல் , டீசல் விலையைக் குறைக்கும் வகையில் வாட் வரியை குறைக்கும் அறிவிப்பை வெளியிடும் திட்டத்திலும் இருக்கிறாராம் கேசிஆர். விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவது, வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவி திட்டங்கள் ஆகியவையும் கேசிஆரின் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவாம். தெலுங்கானாவில் ஏற்கனவே அமல்படுத்தி வரும் உதவித் தொட்டங்களுக்கான தொகையை உயர்த்தி அறிவிப்பது என்பதும் கேசிஆரின் வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கக் கூடுமாம். இப்படி கேசிஆர் அறிவிக்கப் போகும் வாக்குறுதிகள் வாக்காளர்களை திக்குமுக்காட வைத்து காங்கிரஸின் ஆட்சிக் கனவை ஆட்டம் காண வைக்கக் கூடும் என்கிற நம்பிக்கையுடன் களப்பணியில் இருக்கின்றனர் பிஆர்எஸ் கட்சியினர்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications