அனலடிக்கும் தெலங்கானா அரசியல் களம்.. 20 தொகுதிகளில் காங்கிரஸ் சுருங்கும்.. அடித்து சொல்லும் கேசிஆர்
ஹைதராபாத்: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வெறும் 20 தொகுதிகளில் சுருங்கிவிடும் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. எனவே இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. பிரசாரத்தில் ஒருவரையொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.

அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரேவந்த் ரெட்டியின் சொந்த தொகுதியான கோடங்கல் தொகுதியில் நடந்த பிஆர்எஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், "ரேவந்த் ஒரு நில அபகரிப்பாளர். அவரது சொந்த தொகுதியிலே அவர் ஏராளமான நிலங்களை அபகரித்திருக்கிறார். ஆனால் இது குறித்து அவருக்கு எந்த மனகசப்பும் கிடையாது. அவர் மாதிரியான ஆட்கள் அரசியலில் இருக்க வேண்டுமா? காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வராது. அக்கட்சி வெறும் 20 சீட்டில் சுருங்கிவிடும்.
அவர் பிஆர்எஸ் எம்எல்ஏக்களை ரூ.50 லட்சம் கொடுத்து வாங்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். குற்ற வழக்கில் சிறை சென்று திரும்பிய பின்னரும் கூட அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. தற்போது முதல்வர் கனவில் இருக்கிறார். மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். எனக்கு முதல்வர் பதவி மீது மோகம் கிடையாது. நமது மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே நோக்கம்" என்று விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் ரேவந்த் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
நிஜாமாபாத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், "சந்திரசேகர ராவ் விரைவில் தன்னுடைய முதலமைச்சர் பதவியை இழக்க போகிறார் என்பதை உணர்ந்திருக்கிறார். காங்கிரஸ் தெலங்கானாவில் 80 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். ஒருவேளை 80 தொகுதிகளுக்கு குறைவாக பெற்றால் சந்திரசேகர ராவ் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.
பொதுமக்களின் பல லட்சம் கோடி பொது பணத்தை கேசிஆரின் குடும்பம் சுருட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கேசிஆரின் மகள் கவிதாவை தோற்கடித்ததற்காக நிஜாமாபாத் மக்கள் மீது அவர் வெறுப்பில் இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரும் போது 100 நாட்களில் சர்க்கரை ஆலைகளை திறப்பதாக உறுதியளித்தார். ஆனால் 10 ஆண்டு கடந்தோடிவிட்டது. போதாத குறைக்கு விவசாயிகளின் நிலங்களையும் அவர் அபகரிக்க முயற்சிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications