தெலுங்கானா: வேட்பாளர் பட்டியலை வெளியிடும் கேசிஆர்.. அதிருப்தியாளர்கள் கட்சி தாவ ஜரூர்- பாஜக குஷி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆளும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அடுத்த வாரம் வெளியிட உள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் கட்சி தாவுவதற்கும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் சிலர் தயாராக இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கானா அரசியல் களம் பரபரக்கிறது.
தெலுங்கானா சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், பாஜக உள்ளன. ஆனால் தெலுங்கானா மாநிலம் உருவான பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி பெற்ற பிரம்மாண்ட வெற்றி காங்கிரஸ், பாஜகவின் முயற்சிகள் வீண் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் முதல்வர் கேசிஆர் வெளியிட உள்ளார். தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 90% பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர திட்டமிட்டுள்ளாராம் கேசிஆர். வேட்பாளர் பட்டியல் வெளியான உடனேயே கட்சி தாவல்கள் நடக்கும் என்பதை யூகித்துக் கொண்டுதான் கேசிஆர் முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறாராம்.
பிஆர்எஸ் கட்சி தலைமையுடன் மல்லுக்கட்டுகிற, தொகுதியில் கெட்ட பெயரை உருவாக்கி வைத்திருக்கிற 10 முதல் 20 எம்.எல்.ஏக்களுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட இருக்கிறதாம். இதனை அரசல் புரசலாக புரிந்து கொண்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள், வேட்பாளர்களைத் தேடும் நிலையில் இருக்கும் காங்கிரஸ், பாஜக பக்கம் தாவவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனராம். இதில் பெரும்பாலானோர் பாஜக பக்கம் தாவ தூது அனுப்பி வருவதால் அக்கட்சி படுகுஷியில் இருக்கிறதாம். அதேநேரத்தில் இந்த அதிருப்தியாளர்களைத் தக்க வைக்க ஒரு குழுவை முதல்வர் கேசிஆர் அமைத்துள்ளாராம். அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு நியமன பதவிகள் வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்க உள்ளதாம் பிஆர்எஸ். இதனால் தெலுங்கானா தேர்தல் களம் கன ஜோராக களைகட்டி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications