மனைவியோடு நடுமேடையில் சோனியா காலில் விழுந்து கும்பிட்ட ரேவந்த் ரெட்டி- ஆரத் தழுவிய சித்தராமையா!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றார். அப்போது மனைவியுடன் சோனியா காந்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் ரேவந்த் ரெட்டி.

தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. தெலுங்கானாவின் 2-வது முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். தெலுங்கானா எல்.பி. ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் முன்னிலையில் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். ரேவந்த் ரெட்டிக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 Telangana CM Revanth Reddy, family meet Sonia, Rahul, Priyanka Gandhi

இந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்ல்கார்ஜூன கார்கே, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேடையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்டோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

அப்போது மனைவியை கையை பிடித்து மேடையேற்றிய ரேவந்த் ரெட்டி நேராக சோனியா காந்தி அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்றனர். சோனியாவின் காவில் ரேவந்த் ரெட்டியும் அவரது மனைவியும் விழுந்து வணங்கினர். சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு மனைவி, மகள் மற்றும் மருமகனை அறிமுகம் செய்து வைத்தார் ரேவந்த் ரெட்டி. அவரது பேரக் குழந்தையை மேடையில் கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் ரேவந்த் ரெட்டியை கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+