Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛அண்ணாமலை’ பட பாணியில்.. மாட்டு தொழுவத்தை இடித்த எம்எல்ஏ.. பதிலுக்கு தம்பதி செய்த செயல்..

Subscribe to Oneindia Tamil

ஹைதரபாத்: நடிகர் ரஜினிகாந்தின் ‛அண்ணாமலை’ திரைப்படத்தில் நடப்பது போல் தெலுங்கானாவில் ஒரு தம்பதியின் மாட்டு தொழுவம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் பின்னணியில் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது முகாம் அலுவலகத்தில் எருமை மாடுகளை கட்டி வைத்த தம்பதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‛அண்ணாமலை'. இந்த படத்தில் ரஜினிகாந்த் மாடுகள் வளர்ப்பார். அதற்கென தனியாக தொழுவம் அமைத்திருப்பார். அவரது மாட்டு தொழுவம், வீடு புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படும். ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் சரத்பாபு தான் இந்த வேலையை செய்திருப்பார். அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த், சரத் பாபுவின் வீட்டுக்கு சென்று சவால் விட்டு அவரை விட பெரிய கோடீஸ்வரராக முன்னேறுவார்.

இப்படி அண்ணாமலை பட பாணியில் ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மாட்டு தொழுவத்தை இடித்தது போல் தெலுங்கானாவில் ஒரு தம்பதியின் மாட்டு கொட்டகை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் காங்கிரஸ் எம்எல்ஏ இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த தம்பதி செய்த செயல் அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

telangana-couple-tie-buffaloes-at-congress-mlas-office-after-their-shed-demolition

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். தெலுங்கானாவில் உள்ள ஜெயசங்கர் புபால்பள்ளி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் காந்த்ர சத்யநாராயணா. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

இவரது தொகுதிக்குட்பட்டு விஷாலபள்ளி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கேரகுலா ஒடேலு மற்றும் லலிதா என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் எருமை மாடுகளை மேய்த்து அதன் மூலம் கிடைக்கும் பால் கறந்தை விற்பனை செய்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் கேரகுலா - லலிதா ஆகியோரின் மாட்டு தொழுவம் இடித்து அகற்றப்பட்டது. இதன் பின்னணியில் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யநாராயணா தான் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உத்தரவின்பேரில் தான் மாட்டு தொழுவம் இடிக்கப்பட்டதாக அந்த தம்பதி நினைத்தனர். இதனால் அவர்கள் கடும் கோபமடைந்தனர்.

எருமைகளுக்கு மாட்டு தொழுவம் இல்லாததை நினைத்து கவலைப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தாங்கள் வளர்க்கும் எருமை மாடுகளை காங்கிரஸ் எம்எல்ஏ சத்யநாராயணாவின் முகாம் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அலுவலகத்தின் முன்பு எருமை மாடுகளை கட்டிவைத்தனர். தங்களுக்கு மாட்டு தொழுவம் கட்டி தர வேண்டும். இல்லாவிட்டால் எருமைகளை இங்கிருந்து கொண்டு செல்லமாட்டோம் என்று கூறினர்.

இதையடுத்து போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன்பிறகு எருமைகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதுபற்றி அந்த தம்பதி கூறுகையில், ‛‛நாங்கள் பணம் பெறாமல் இவருக்கு ஓட்டு போட்டோம். இதற்கான பலன் இதுதான்?'' என்று ஆதங்கப்பட்டனர்.

மேலும் இந்த விவசாயிகளின் இந்த நடவடிக்கை எம்எல்ஏ அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்திருந்தார். அரசின் செயல், கொள்கைகள் எல்லாம் விவசாயிகளுக்கு எதிராகவே இருக்கிறது. தெலுங்கானா மாநில மக்களின் நலன்களை காப்பதற்கு பதில் இந்த அரசு ஆந்திர மக்களின் நலனை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+