தெலங்கானாவில் நோ மெஜாரிட்டி? கணித்த டிகேஎஸ், கேடிஆர்! பிளான் பி-யில் காங்கிரஸ்-பிஆர்எஸ்.. என்ன அது?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் நிலையில் காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் மற்றும் பிஆர்எஸ் கட்சியின் அமைச்சர் கேடி ராமராவ் (முதல்வர் சந்திரசேகர் ராவ் மகன்) ஆகியோர் கட்சியினரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க ‛பிளான்-பி’-யை கையில் எடுக்க உள்ளன.
2014ல் புதிய மாநிலமாக உருவான தெலுங்கானா 3வது சட்டசபை தேர்தலை சந்தித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக அங்குள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 71 சதவீத ஓட்டுகள் பதிவானது.

தெலுங்கானாவை பொறுத்தவரை ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் அங்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது
தெலுங்கானாவில் தற்போது அங்கு ஆட்சியில் உள்ள பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 2014, 2018 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2 முறை முதல்வரான பிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகரராவ் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து காத்துள்ளார். அதேவேளையில் கடந்த 2 முறை அடைந்த படுதோல்விகளுக்கு தக்கபதிலடி கொடுத்து முதல் முறையாக தெலுங்கானாவில் அரியணை ஏறும் துடிப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இதுதவிர பாஜக, ஓவைசியின் ஏஐஎம்எஐஎம் கட்சியும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் களத்தில் உள்ளன. இருப்பினும் இந்த தேர்தலில் நேரடி போட்டி என்பது காங்கிரஸ்-பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையே தான். ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் மட்டுமே பாஜக மற்றும் ஓவைசியின் கட்சிகளுக்கான மவுசு என்பது அதிகரிக்கும்.
பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. இது பிஆர்எஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை தான் அமையும். காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகளுக்கு மெஜாரிட்டி என்பது கிடைக்காது என தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் மற்றும் பிஆர்எஸ் முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் ஆகியோர் கட்சியினரிடம் கூறிய தகவல் இருதரப்புக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளதாம்.
கர்நாடா காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் உள்ள டிகே சிவக்குமார் தற்போது தெலுங்கானாவில் உள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்டிக்காப்பதில் கைதேர்ந்தவர் இவர். தெலுங்கானா காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிஆர்எஸ் கட்சி இழுக்கலாம் என்ற தகவல் பரவும் நிலையில் அவர்களை பாதுகாக்க டிகே சிவக்குமார் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான் அவர் கட்சியினரிடம், ‛‛தெலுங்கானாவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது’’ என தெரிவித்துள்ளாராம்.
அதேபோல் முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமராவ், ‛‛காங்கிரஸ் கட்சி 56 தொகுதிகளில், பிஆர்எஸ் கட்சி 51 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’’ என தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் ஒருவேளை 50க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் பிளான்-பி மூலம் ஆட்சியமைக்க காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதாவது ரிசல்ட் வந்தவுடன் இன்று இரவே வெற்றி பெறும் பிற கட்சி, சுயேச்சை எம்எல்ஏக்களை இழுப்பது, அதோடு முதல் ஆளாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருகட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மாநிலத்தில் ஆட்சியமைப்பதை உறுதி செய்து விட்டு அதன்பிறகு சில நாட்களில் பிற கட்சி எம்எல்ஏக்கள் உதவியுடன் மெஜாரிட்டியை நிரூபித்த அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பிளான் பி மூலம் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களையும், பிஆர்எஸ் கட்சி காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் இழுக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தெலுங்கானா அரசியல் களம் என்பது சூடுபிடித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications