முதல்வர் கேசிஆர் முதல் ஓவைசி தம்பி வரை! தெலுங்கானாவின் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் முதல் அவரது மகன் கேடி ராமராவ் முதல் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஓவைசியின் தம்பி அக்பருதீன் ஓவைசி வரை நட்சத்திர வேட்பாளர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் அதன் ரிசல்ட் முழுவதுமாக வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ல் உதயமானது. இதையடுத்து நடந்த முதல் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைவர் சந்திரசேகரராவ் முதல்வரானார். அதன்பிறகு 2018 ல் 2வது முறையாக சட்டசபை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலிலும் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து சந்திரசேகரராவ் 2வது முறையாக முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் தெலுங்கானா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக அங்குள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் மேஜிக் நம்பரான 60யை எட்டிப்பிடித்து ஆட்சியை பிடிக்க 4 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
அதாவது முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எனும் பெயர் பிஆர்எஸ் என மாற்றம்) கட்சி, காங்கிரஸ் கட்சி, பாஜக, மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே போட்டி நிலவியது. இந்நிலையில் தான் இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவை பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவினாலும் கூட நேரடி போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் ஆளும் பிஆர்எஸ் கட்சிகள் இடையே தான் இருந்தது.
இந்த 2 கட்சியில் ஒன்று தான் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பிஆர்எஸ் கட்சியை விட காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக பல கருத்து கணிப்புகள் வந்தன. இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபை தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் பலர் களமிறங்கிய நிலையில் அவர்களின் வெற்றி, தோல்வி விபரம் வருமாறு:
முதல்வர் கேசிஆர்: தெலுங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகரராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் போட்டியிட்டார். கடந்த 2018 தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்டு 58 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்ற நிலையில் இப்போது காமரெட்டி தொகுதியிலும் களமிறங்கினார்.
காமரெட்டியில் சந்திரசேகர் ராவ் தோல்வியடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காமரெட்டி தொகுதியில் பாஜகவின் கட்டிபள்ளி வெங்கட ரமண ரெட்டியிடம் சந்திரசேகர் ராவ் தோல்வியடைந்தார். வெங்கட ரமண ரெட்டி 66,652 ஓட்டுகள் பெற்ற நிலையில் 6,741 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதியில் 2வது இடத்தை காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி பிடித்த நிலையில் சந்திரசேகர் ராவ் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இருப்பினும் சந்திரசேகர் ராவுக்கு அவரது சொந்த தொகுதியான கஜ்வெல் மீண்டும் கைக்கொடுத்துள்ளது. அதாவது கஜ்வெல் தொகுதியில் பாஜக வேட்பாளர் எட்டலா ராஜேந்தரை அவர் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இங்கு சந்திரசேகர் ராவ் 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 ஓட்டுகள் பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் எட்டலா ராஜேந்தரை 45,031 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் மீண்டும் எம்எல்ஏவாக சந்திரசேகர் ராவ் தெலுங்கானா சட்டசபைக்கு செல்ல உள்ளார்.
ரேவந்த் ரெட்டி: தெலுங்கானாவில் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர் தான். தெலங்கானாவின் மல்காஜ்காரி தொகுதியின் எம்பியான இவர் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக உள்ளார். ரேவந்த் ரெட்டி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். காமரெட்டி தொகுதியில் ரேவந்த் ரெட்டி முதல்வர் சந்திரசேகர்ராவை எதிர்த்து களமிறங்கினார். இதில் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர் ராவ் என 2 பேரும் தோல்வியடைந்த நிலையில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி வெற்றி பெற்றார்.
இருப்பினும் 2வது தொகுதியான கோடங்கல் தொகுதியில் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். ரேவந்த் ரெட்டி மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 429 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிஆர்எஸ் வேட்பாளர் பட்னம் நரேந்தர் ரெட்டியை 32 ஆயிரத்து 532 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலையில் ரேவந்த் ரெட்டி முதல்வராக வாய்ப்புள்ளது.
எட்டலா ராஜேந்தர்: பாஜகவின் மூத்த தலைவராக அறியப்படும் எட்லா ராஜேந்தர் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். கஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர் ராவை எதிர்த்த எட்டலா ராஜேந்திர் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஹுசூராபாத் தொகுதியிலும் மீண்டும் களமிறங்கினார். இதில் கஜ்வெல் தொகுதியில் சந்திரசேகர் ராவிடம், எட்டலா ராஜேந்தர் தோல்வியடைந்தார். அதேபோல் ஹுசுராபாத் தொகுதியில் பிஆர்எஸ் வேட்பாளர் கவுசிக் ரெட்டி படியிடம் 16,873 ஓட்டுகள் வித்தியாசத்தில் எட்டலா ராஜேந்தர் தோல்வியடைந்தார். இதன்மூலம் 2 தொகுதிகளிலும் அவர் தோல்வியடைந்துள்ளார்.
முன்னதாக எட்டலா ராஜேந்தர் சந்திரசேகரராவுடன் சேர்ந்து 18 ஆண்டு ஒன்றாக அரசியல் செய்தவர். சந்திரசேகரராவின் நம்பிக்கையை பெற்ற தலைவராக அறியப்பட்ட இவர் நிதி அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2021ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்தார். தெலுங்கானாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் 2 தொகுதிகளிலும் தோற்றுள்ளார்.
கேசிஆர் மகன்: முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கேடி ராமராவ் சிர்சில்லா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இவர் 2014, 2018 சட்டசபை தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குறிப்பாக கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 89 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் மீண்டும் களமிறங்கி சாதித்துள்ளார். அதன்படி சிர்சில்லா தொகுதியில் பிஆர்எஸ் வேட்பாளர் கேடி ராமராவ் 89,244 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை மகேந்திர ரெட்டியை 29,687 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
முகமது அசாருதீன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஜுபிலி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி கோபிநாத்திடம் 16,337 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
பாஜகவின் சர்ச்சை எம்எல்ஏ: பாஜகவின் சர்ச்சை எம்எல்ஏவான டி ராஜா சிங் கோஷமகால் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். இவர் 2014, 2018 தேர்தலில் இங்கு வெற்றி பெற்றிருந்த நிலையில் 3வது முறையாக களமிறங்கி உள்ளார். கடந்த தேர்தலில் இவர் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை இவரை எதிர்த்த பிஆர்எஸ் கட்சியின் நந்த கிசோர் போட்டியிடுகிறார்.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசிய நிலையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு தேர்தலுக்கு முன்பு மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்ட நிலையில் கோஷா மஹால் தொகுதியில் போட்டியிட்டார். இதில் ராஜாசிங் எம்எல்ஏ கோஷாமஹால் தொகுதியில் 80,182 ஓட்டுகள் பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் நந்த கிசோரை விட 21,457 ஓட்டுகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏவாகி உள்ளார்.
பண்டி சஞ்சய் குமார்: பாஜவின் தேசிய செயலாளரான இவர் கரீம் நகர் எம்பியாக இருக்கிறார். தற்போது பண்டி சஞ்சய் குமார் கரீம் நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் கங்குலா கமலகரிடம் தோல்வியடைந்த நிலையில் இந்த முறை மீண்டும் அவரை எதிர்த்து போட்டியிட்டார். இங்கு காங்கிரஸ் சார்பில் புருமல்ல சீனிவாஸ் களமிறங்கினார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் பண்டி சஞ்சய் குமார் 3,163 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பண்டி சஞ்சய் குமாரை எதிர்த்து போட்டியிட்ட பிஆர்எஸ் கட்சியின் கங்குலா கமலாகர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
ஹரீஷ் ராவ்: தெலங்கானாவில் 6 முறை எம்எல்ஏவாகவும், முதல்வர் சந்திரசேகரராவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருப்பவர் ஹரீஷ் ராவ். இவர் சித்திப்பேட்டை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் அவர் 1 லட்சத்து 31 ஆயிரத்து 295 ஓட்டுகள் வித்தியாசத்தில் டிஜேஎஸ் வேட்பாளர் பவானியை வீழ்த்தி வெற்றி பெற்று எம்எல்ஏவாகி அமைச்சரானார்.
இந்த தேர்தலில் டி ஹரீஷ்ராவ் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 514 ஓட்டுகள் பெற்றார். அதோடு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஜாலா ஹரி கிருஷ்ணாவை 82,308 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் வாகை சூடியுள்ளார்.
ஓவைசியின் தம்பி: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசியின் தம்பி அக்பருதீன் ஓவைசி சந்திராயன்குட்டா தொகுதியில் களமிறங்கினார். தற்போது இந்த தொகுதியின் எம்எல்ஏவாக அவர் உள்ள நிலையில் மீண்டும் போட்டியிட்டார். ள்ளார். இந்த தொகுதியில் கடந்த 1999 முதல் 2018 வரையிலான 5 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது 6வது வெற்றிக்காக களமிறங்கி வாகை சூடியுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிஆர்எஸ் கட்சியின் முப்பி சீதாராம் ரெட்டியை விட 81,660 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications