தெலுங்கானா: பிஆர்எஸ் அரசு மீது அட்டாக்- தெலுங்கு கவிதையை வாசித்து கைதட்டல்- அடடே! ஆளுநர் தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று உரையாற்றுகையில் முந்தைய பிஆர்எஸ் ஆட்சியின் இரும்புப் பிடியில் இருந்து மாநிலம் விடுவிக்கப்பட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த உரையை முடிக்கும் போது தெலுங்கு மொழி கவிதை முதல் முறை தடுமாறி வாசித்தாலும் பின்னர் தெளிவாக உச்சரித்து வாசித்து கைதட்டலைப் பெற்றார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இடைவிடாத மோதல் போக்கு இருந்தது. சட்டசபை கூட்டத் தொடர்கள் ஆளுநர் உரை இல்லாமலேயே நடத்தப்பட்டன. தெலுங்கானா பிஆர்எஸ் ஆட்சி- ஆளுநர் தமிழிசை இடையேயான மோதல் உச்சநீதிமன்றம் வரை போனது.

Telangana: Governor Tamilisai Soundararajan to Address Joint Session of Legislature

தற்போது தெலுங்கானாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ், ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுள்ளார். ரேவந்த் ரெட்டி அரசு இடைக்கால சபாநாயகராக ஓவைசி கட்சியின் அக்பருதீன் ஓவைசியை நியமித்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து பதவி பிரமாணமே ஏற்கவும் மறுத்தது. பின்னர் சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தலித் தலைவரான கடம் பிரசாத் குமார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சபாநாயகர் கடம் பிரசாத் குமார் முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்.

Telangana: Governor Tamilisai Soundararajan to Address Joint Session of Legislature

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் தெலுங்கானா சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. தெலுங்கானா சட்டசபை, சட்ட மேலவையின் கூட்டுக் கூட்டமானது இன்று ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழிசையின் உரைக்கு தெலுங்கானா அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அனுப்பி வைத்தது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது வழக்கமாகிவிட்டது. அத்தகைய மாநில அரசுகளின் உரையை அப்படியே படிக்காமல் சில பகுதிகளை விடுவித்தும் சிலவற்றை சேர்த்தும் ஆளுநர்கள் உரை நிகழ்த்துகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படி உரை நிகழ்த்தியது சபை குறிப்பில் இடம்பெறாது என உடனடியாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது.

இந்தப் பின்னணியில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று ஆற்றும் உரையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்றைய உரையில் முந்தைய சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை விமர்சிக்கும் வாசகங்களை அப்படியே வாசித்தார் தமிழிசை சவுந்தரராஜன். உரையை முடிக்கும் போது தெலுங்கு மொழி கவிதையை சற்று தடுமாறி வாசித்தார். அப்போது சபையில் சில திருத்தங்களை எம்.எல்.ஏக்கள் குறிப்பிட்டனர். பின்னர் வேகமான உச்சரிப்புடன் வாசித்து சபையின் கைதட்டலைப் பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+