கோர்ட் பிறப்பித்த இடைக்கால தடை.. ஆணை வருவதற்குள் இடித்துச் சரிக்கப்பட்ட நாகார்ஜுனாவின் அரங்கம்!
ஹைதராபாத்: தெலுங்கானா உயர் நீதிமன்றம் நேற்று நாகார்ஜுனாவுக்கு சொந்தமான “என் - கன்வென்ஷன்” இடிக்கப்படுவது தொடர்பான வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், அதிகாரிகள் ஏற்கனவே அந்த அரங்கின் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் எனக் கூறப்படும் பகுதியில் இருந்த முழு கட்டமைப்பையும் இடித்துவிட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏரிகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ரேவந்த் ரெட்டி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு, ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமையை (HYDRAA) கடந்த ஜூலை 17-ல் உருவாக்கியது. அந்த அமைப்பு இயங்க ஆரம்பித்த பின்னர் மேற்கொள்ளப்படும் முதல் பெரிய நடவடிக்கை நாகார்ஜுனாவின் கட்டிட இடிப்பு சம்பவம் தான்.

நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான N கன்வென்ஷன் மையம் மாதப்பூரில் உள்ளது. மாதப்பூரில் உள்ள இந்த அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்கம். இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் ரெட்டி இணைந்து நடத்தும் நிறுவனம்.
இங்கு, திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு வந்தன. இந்த அரங்கில் தான், 2015-ல் தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண ரிசப்ஷன் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்தேறின.
மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. இந்த அரங்கம் கட்டப்பட்ட போதே, சுமார் 3.12 ஏக்கருக்கு ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அரங்கத்துக்கு வந்த ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
நாகார்ஜுனாவின் என் கன்வென்ஷன் அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்ற புகாரின் பேரில் இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நடிகர் நாகார்ஜூனா ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். கட்டிடங்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரினார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்தது.
நாகார்ஜுனா தரப்பு வாதங்களைக் கேட்ட ஹைதராபாத் உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், இடிப்புக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்குள், நாகார்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளான 3.12 ஏக்கரில் உள்ள அரங்கை அதிகாரிகள் இடித்து முடித்துவிட்டனர்.
இது தொடர்பாக நடிகர் நாகார்ஜுனா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிப்பு நிலம் இல்லை. இது முற்றிலுமாக பட்டா நிலம். அந்த கட்டிடங்களை இடிப்பதற்கு முன் ஒரு நோட்டீஸ் கூட வழங்கப்பட வில்லை. ஒருவேளை அது ஆக்கிரமிப்பு கட்டிடங்களாக இருந்தால், நானே முன்னின்று இடித்திருப்பேன். எனது கருத்தரங்கு கட்டடத்தை சட்டத்துக்கு புறம்பான நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் இடித்துள்ளார்கள். அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு சரியான நிவாரணம் வேண்டி நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ஹைட்ரா அமைப்பின் ஆணையர் ரங்கநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திம்மடிகுண்டாவில் உள்ள பல ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் நாகார்ஜுனாவின் கட்டிடங்களும் உள்ளன. மொத்தம் 3.5 ஏக்கர் ஏரி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 10 ஆண்டு காலம் வணிக ரீதியாக சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்தது. இது சட்டப்படி குற்றம். எனவேதான் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications