"ரெண்டு லட்டு".. நீ வேணும்.. கூடவே நீயும் வேணும்.. வீட்டில் வெட்டியா இருந்தாலும்.. பலே அர்ஜுன் மாமா

அக்கா, தங்கையை ஒரே நேரத்தில் மணந்துள்ளார் ஆந்திர இளைஞர் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரே நேரத்தில் 2 பேரை திருமணம் செய்த இளைஞரை பார்த்து, 90'ஸ் கிட்ஸ்களின் காதில் புகை வந்து கொண்டிருக்கிறது..!

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கான்பூர் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பெரும்பாலும் ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்..

அப்படி வசித்து வந்தவர்தான் வேலாடி அர்ஜுன் என்ற இளைஞர்.. இவர் டீச்சர் ட்ரெயினிங் முடித்துள்ளார்.. ஆனால், வேலை கிடைக்கவில்லை..

 காதல்

காதல்

தற்காலிகமாக கூட எங்கும் வேலைக்கு போகாமல், வீட்டிலேயே வெட்டியாக பொழுதை கழித்து கொண்டிருந்தார்.. அப்போதுதான் காதலில் விழுந்தார் அர்ஜுன். தன்னுடைய அத்தை மகள் சுரேகாவை காதலித்தார்.. செல்போனிலேயே அடிக்கடி இருவரும் காதலை வளர்த்தனர்.. இந்த சமயத்தில்தான் கனகா என்ட்ரி ஆனார்.. இந்த கனகா, சுரேகாவின் உடன்பிறந்த தங்கை ஆவார்.

 அத்தை மகள்கள்

அத்தை மகள்கள்

ஒரே நேரத்தில் 2 அத்தை மகள்களையுமே அர்ஜுன் மாறி மாறி காதலித்தார்.. எந்நேரமும் இருவரிடமும் மாறி போனில் பேசி கொண்டே இருப்பார்.. அதேசமயம், ஒருவரை காதலிப்பது இன்னொருத்தருக்கு தெரியாமலும் கவனமாக பார்த்து கொண்டார். அதாவது கனகா கான்பூர் கிராமத்தில் இருந்தார்.. சுரேகா ஷம்பகுடா என்ற கிராமத்தில் இருந்தார்.. இதனால்தான் 2 பேரையும் ஒரே சமயத்தில் அர்ஜுனால் காதலிக்க முடிந்தது.. இப்படியே 3 வருஷமானது.. 2 பேரையுமே தனித்தனியாக சந்தித்தும் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார்.

 அர்ஜுன்

அர்ஜுன்

இந்த விஷயம் ஒருநாள் அந்த பெண்களின் வீட்டுக்கு தெரியவந்தது.. "2 பேரில் யாரை கல்யாணம் செய்ய போகிறாய்?" என்று எல்லா சொந்தக்காரர்களும் அர்ஜுனை பார்த்து கேட்டனர்.. இதற்காக அர்ஜுன் டென்ஷன் ஆகவில்லை.. 2 காதலிகளையும் தனித்தனியாக அழைத்து சென்றார்.. கொஞ்ச நேரம் அவர்களிடம் பேசினார்.. பிறகு, 2 பேரையுமே கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்லி, ஒட்டுமொத்த சொந்தக்காரர்களையும் மிரள வைத்தார்.

 2 காதலிகள்

2 காதலிகள்

இதனால், குழம்பி போன உறவினர்கள், சம்பந்தப்பட்ட அந்த பெண்களிடமே பேசி பார்த்தனர்.. குடும்ப வழக்கப்படி 2 மனைவிகள் ஏற்று கொள்வதில்லை என்றும், இதில் யாராவது ஒருவர் விட்டுத்தரும்படியும் கேட்டு கொண்டனர்.. ஆனால், "மாமாவை தவிர நாங்கள் வேற யாரையும் கல்யாணம் செய்ய மாட்டோம்" என்று அக்கா - தங்கைகள் உறுதியாக சொல்லிவிட்டனர்..

 முதல்முறை

முதல்முறை

இதனால், பெற்றோர்கள், அந்த கிராமத்து பெரியவர்களை அழைத்து இது பற்றி எடுத்துரைத்து, திருமணத்தக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, கான்பூர் கிராமத்திலேயே ஒரே மேடையில் 2 அத்தை பெண்களுக்கும் தாலி கட்டினார் அர்ஜுன்.. பொதுவாக ஆதிவாசிகள் 2 பேரை கல்யாணம் செய்ததே கிடையாதாம்.. இதுதான் முதல்முறை என்கிறார்கள் அந்த ஊர் பெரியவர்கள்.. இப்போது 2 மனைவிகளுடன் "அர்ஜுன் மாமா" இல்லற வாழ்க்கையை தொடங்கி உள்ளார்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+