"தெலுங்கு மொழியை திணிக்காதீர்கள்.." தெலுங்கானாவில் நடந்த வினோத போராட்டம்! என்ன காரணம்
ஹைதராபாத்: நாடாளுமன்றத்திலும் கூட இப்போது மொழி கொள்கை குறித்துப் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகிறது. தாய்மொழி கல்வி குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாகச் சொல்லி போராட்டம் நடந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் இப்போது மொழி கொள்கை குறித்து விவாதம் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்திலும் கூட மொழி கொள்கை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. ஒரு பக்கம் மும்மொழி கொள்கையை வலியுறுத்தி பலரும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். மறுபுறம் தமிழக தலைவர்கள் இரு மொழி கொள்கை என்பதில் உறுதியாக உள்ளனர்.

தெலுங்கு மொழிக்கு எதிராகப் போராட்டம்
அதேநேரம் தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் உறுதியாக உள்ளனர். இதற்கிடையே தெலுங்கானாவில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாகச் சொல்லி போராட்டம் நடந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது சமீபத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழியைக் கட்டாயமாக்கி மாநில அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும், இந்த அறிவிப்புக்கு எதிராகத் தெலுங்கு மொழியாகக் கட்டாயப் பாடமாக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்யக் கோரி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஹைதராபாத் தர்ணா சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர்.
தேவையற்ற குழப்பம்
தெலுங்கானா அரசின் இந்த உத்தரவு மாணவர்களின் கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் மாணவர்களின் மொழி விருப்பங்களைப் புறக்கணிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாகத் தெலுங்கு பேசாத சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அடிக்கடி இடமாற்றம் காரணமாக வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்வோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். தெலுங்கு கட்டாயம் என்ற இந்த அறிவிப்பு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பெற்றோர் கருத்து என்ன
அவர்கள் மேலும் கூறுகையில், "மாணவர்கள் விரும்பிய மொழியை கற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். தங்கள் கல்வி மற்றும் தொழில் எதிர்காலத்திற்குப் பயனளிக்காத ஒரு குறிப்பிட்ட மொழியைக் கற்கக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நமது மாநிலத்தில் பல மொழிகள் பேசப்படும் நிலையில், அந்த பன்முகத்தன்மையை இந்த மொழி திணிப்பு பாதிக்கிறது.
மாணவர்கள் தங்கள் தேவை, விருப்பம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இரண்டாவது மொழியைத் தேர்வு செய்யத் தெலுங்கானா அரசு அனுமதிக்க வேண்டும். வேண்டும் என்றால் தெலுங்கு மொழியைக் கட்டாய மூன்றாவது மொழியாக அறிவிக்கட்டும். அதுவும் கூட படிப்படியாக ஒன்றாம் வகுப்பில் இருந்தே அமல்படுத்த வேண்டும்" என்றனர்.
தேவையற்ற அழுத்தம்
கட்டாய தெலுங்கு மொழி என்பது மாணவர்களிடையே தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லி மாணவர் பிரதிநிதிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "நான் இப்போது 9வது வகுப்பு படிக்கிறேன். இதுவரை நான் பள்ளியில் தெலுங்கு மொழி படித்ததே படித்ததில்லை. இப்போது தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டால். அது 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முடிவுகளைப் பாதிக்கும்" என்றார்.
தெலுங்கு மொழி என்பது மாநிலத்தின் அடையாளம் மற்றும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் போராட்டக்காரர்கள் ஒப்புக் கொண்டாலும், மொழித் தேர்வு இருப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கருதி தெலுங்கானா அரசு முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர். 9ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி படிக்காமல் இருப்பவருக்கும் முதலாம் வகுப்பு முதல் தெலுங்கு படிப்பவருக்கும் இடையே இது ஒரு சமச்சீரற்ற நிலையை உருவாக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications