பிஆர்எஸ்ஸை முந்திய பாஜக! அப்போ காங்கிரஸ்? தெலுங்கானா நாடாளுமன்ற தேர்தலில் வெல்வது யார்? பரபர சர்வே
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. இந்நிலையில் தான் தெலுங்கானாவில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது குறித்து பரபரப்பான சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. இந்நிலையில் தான் தெலுங்கானாவில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது குறித்து பரபரப்பான சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது.

இந்த சர்வே முடிவில் காங்கிரஸின் கை ஓங்கி உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிஆர்எஸ் கட்சி பாஜகவை விட குறைந்த தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு 2 முறை தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வராக நீடித்தார். இந்த முறை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க அவர் நினைத்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. 119 சட்டசபை தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 60 இடங்களில் வெல்ல வேண்டும். அதன்படி காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், மற்றவர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் தெலுங்கானா முதல்வராக நேற்று ரேவந்த் ரெட்டி பொறுப்பாற்றார். ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ரேவந்த் ரெட்டிக்கு தெலுங்கானா முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தான் தெலுங்கானாவில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார்? வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பரபரப்பான சர்வே மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கானாவில் மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், ஓவைசி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் தான் தற்போதைய சர்வேயில் கடந்த முறையை விட பாஜக, பிஆர்எஸ் கட்சிகளின் தொகுதிகள் என்பது குறையும். அதோடு சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி பாஜகவை விட பின்தங்கும் எனவும், காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றும் எனவும் இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Democracy Times Network சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வேயின் முடிவுகள் வருமாறு:
தெலுங்கானாவில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சி 43 சதவீத ஓட்டுகள் பெற்று 11 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். அதேவேளையில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கு இந்த சர்வே என்பது அதிர்ச்சி வைத்துள்ளது.
அதாவது தெலுங்கானா மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து இப்போது அதிகாரத்தை இழந்துள்ள பிஆர்எஸ் கட்சி பாஜகவை விட பின்தங்குமாம்.பிஆர்எஸ் கட்சி வெறும் 29 சதவீத ஓட்டுகள் பெற்று 2 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக 22 சதவீத ஓட்டுகளுடன் 3 தொகுதிளிலும் வெல்லும் என இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 6 சதவீத ஓட்டுக்களை பெற்று மற்றவர்கள் ஒரு தொகுதியில் வெல்வார் என கூறப்பட்டுள்ளது. இந்த ஒரு தொகுதி என்பது ஏஐஎம்ஐஎம் ஓவைசி என கூறப்படுகிறது.
இதன்மூலம் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், ஆட்சியை பறிகொடுத்த பிஆர்எஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் இன்னும் சறுக்கலை சந்திக்கும் எனவும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications