"ஐயோ.. நெஞ்சே பதறுதே.." மாணவி முடியை பிடித்து இழுத்து.. சாலையில் கீழே தள்ளி இழுத்த போலீஸ்.. அராஜகம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் டூவிலரில் இருந்தபடியே முடியைப் பிடித்து இழுத்துத் தள்ளிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
சமூகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் எதாவது தவறு நடந்தால் அந்த குற்றவாளிகளைக் கைது செய்வதும் தான் போலீசார் பணி. பெரும்பாலான போலீசார் இதையே முறையாகச் செய்து வருகின்றனர்.

ஆனால், சில போலீசார் மோசமான சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
பகீர் சம்பவம்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த பெண் மாணவியைத் துரத்தி சென்ற பெண் போலீசார் அவரிடம் மோசமான முறையில் நடந்துள்ளனர். ஸ்கூட்டரில் இருந்தபடியே மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவும் நிலையில், இது இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மாணவியிடம் போலீசார் நடந்து கொண்ட விதத்தைப் பலரும் கடுமையாகச் சாடி வரும் நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மாணவி ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
என்ன பிரச்சினை: பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் உயர் நீதிமன்ற கட்டித்தை அமைக்க சுமார் 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தெலுங்கானா அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு வாரமாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 50 ஏபிவிபி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது இந்த மாணவி மட்டும் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடியுள்ளார். அப்போது அங்கு இருந்த இரு பெண் போலீசார் இந்த மாணவியை விரட்டி சென்றுள்ளனர். அப்போது ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து இருந்த போலீசார் இந்த மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். நேற்று புதன்கிழமை பிற்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், போலீஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றதாகவும், முடியை இழுக்கும் சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்துவிட்டதாக ஆய்வாளர் நாகேந்திர பாபு என்பவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான பிஆர்எஸ் தலைவர் கவிதா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தெலுங்கானா போலீசாரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவியை இப்படி தரதரவென இழுத்துச் சென்றதை ஏற்கவே முடியாது. இந்தச் சம்பவத்திற்கு போலீசார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications