தெலுங்கானா: கேசிஆர் அரசுக்கு இடி- இளம்பெண் தற்கொலை- மாணவர்கள் விடிய விடிய போராட்டம்- #ByeByeKCR!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் குரூப் 2 அரசு தேர்வுகள் திடீரென ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வுக்கு தயாராகி வந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண்ணின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஹைதராபாத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இத்தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்ற முனைகிறது. பாஜகவோ, தொங்கு சட்டசபை வந்தால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளலாம் என காத்திருக்கிறது.

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு: முன்னதாக தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 ஆகிய தேதிகள் நடத்தப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஒத்திவைத்தது. தெலுங்கானா அரசு ஊழியர்கள், சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாக் இந்த குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மாணவி தற்கொலை: இதனிடையே குரூப் 2 தேர்வுக்காக ஹைதராபாத் அசோக்நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குரூப் 2 தேர்வை தெலுங்கானா பிஆர்எஸ் அரசு ஒத்திவைத்ததால் விரக்தி அடைந்து அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
BIG SHOCKING News
— Ashish Singh (@AshishSinghKiJi) October 13, 2023
Female student commits suicide in Brindavan Hostel in Ashok Nagar.
Students protesting on the road saying 'we want justice'#ByeByeKCR pic.twitter.com/nrV2TX6yQX
விடிய விடிய போராட்டம்: இதனைத் தொடர்ந்து அசோக்நகரில் இளம்பெண் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்த விடுதி அருகே ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். நள்ளிரவில் செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டும் போராட்டம் நடத்தினர். சமூக வலைதளங்களில் #ByeByeKCR என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டுள்ளது.
பிஆர்எஸ் அரசுக்கு நெருக்கடி: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் இளம்பெண் தற்கொலை ஆளும் பிஆர்எஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸும் கையில் எடுத்து பிஆர்எஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications