சட்டென சரிந்த சுரங்கம்.. உள்ளே சிக்கிய 8 பேர்.. நெருங்கும் தெலுங்கானா ஸ்பெஷல் டீம்! என்ன நடக்கிறது?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 8 பேர் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே அவர்களை மீட்க 3 ஸ்பெஷல் டீம் சுரங்கத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத் என்ற பகுதியில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டம் நடந்து வந்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சுரங்க பணிகள் நடந்து வந்தது.

இதற்கிடையே எதிர்பாராத விதமாக பணிகள் நடந்துகொண்டிருந்த போது அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது.. சுரங்கத்தின் 14வது கிலோமீட்டரில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணியின்போது நீர் கசிவு ஏற்பட்டதாகவும் இதனால் அங்கிருந்த சிமெண்ட் விழுந்ததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை உயிருடன் மீட்கத் தெலுங்கானா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளே சிக்கிய அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர்களை மீட்க 3 ஸ்பெஷல் டீம் சுரங்கத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சுரங்கத்தின் வலிமையை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்பது எப்படி என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications