ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 பேரையும் தூக்கில் போட சொல்லி நாடே கொந்தளிக்கிறது.. மட்டன் கறி போட்டு உபசரித்த தெலுங்கானா ஜெயில்!

குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன் கறி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    4 பேரையும் தூக்கில் போட சொல்லி நாடே கொந்தளிக்கிறது..

    ஹைதராபாத்: 4 பேரையும் தூக்கில் போட சொல்லி நாடே கொந்தளித்து வரும் நிலையில், கொலையாளிகளுக்கு மட்டன் கறியும், பருப்பு சாதமும் தரப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மேலும் கொதிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

    போன வாரம் 26 வயது பெண் டாக்டரை 4 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

    Telangana Veterinary doctor rape case: mutton curry served to rape accused

    நேற்றுகூட, பார்லிமென்ட்டில் எல்லா எம்பிக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையும், வலியுறுத்தலும், இந்த நான்கு பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதுதான். இந்த குற்றவாளிகளின் குடும்பத்தினரும், "சட்டத்திற்கு உட்பட்டு அவர்களை என்ன செய்ய வேண்டுமோ, செய்யலாம்" என்று சொல்லிவிட்டனர்.

    கைதான இவர்கள் 4 பேரும், தெலங்கானாவில் செர்லபள்ளி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயில் மிகவும் பாதுகாப்பான ஜெயில் ஆகும்.. இங்கு அடைக்கப்பட்ட முதல் நாள் ராத்திரி எல்லாம் இவர்கள் யாருமே தூங்கவில்லை என்று ஜெயிலர்கள் சொல்கிறார்கள்.

    அதேபோல, 4 பேருக்கும், முதல் நாள் மதியம் பருப்பு சாதம் தரப்பட்டுள்ளது. நைட் சாப்பாட்டுக்கு மட்டன் தந்துள்ளனர். இதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ஒரு பெண்ணை மிருகத்தனமாக கொலை செய்த கயவர்களை தூக்கில் போட சொன்னால், மட்டன் தந்து இருக்கிறார்களே.. இவர்களுக்கு மட்டன் ஒரு கேடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இப்போது, #HyderabadPolice என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் நெட்டிசன்கள் ஹைதராபாத் போலீஸ்க்கு எதிரான தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Telangana Veterinary doctor rape case: mutton curry and dhaal served to four rape accused in telangana jail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X