4 பேரையும் நடுரோட்டில் நிக்க வச்சு அப்படியே உயிரோடு எரிக்கணும்.. பெண் மருத்துவரின் தாய் கண்ணீர்
ஹைதராபாத்: என் பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த கயவர்களை பொது இடத்தில் வைத்து உயிருடன் எரிக்க வேண்டும் என கொல்லப்பட்ட கால்நடை மருத்துவரின் தாய் ஆவேசமாக தெரிவித்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் 26 வயது பெண்ணான இவர் கொல்லத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.
இவர் தினந்தோறும் தொண்டபள்ளி டோல்கேட் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் கொல்லத்திற்கு செல்வது வழக்கம்.

வாகனம்
அது போல் கடந்த செவ்வாய்க்கிழமை பெண் மருத்துவர் கொல்லத்துக்கு சென்றுவிட்டு வாகனத்தை எடுக்க டோல்கேட் வந்துள்ளார். அங்கு அவரது வாகனம் பஞ்சராகிவிட்டது. உடனே வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்ட போது லாரி டிரைவர் முகமது பாஷா அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து வாகனத்தை பஞ்சர் போட்டு விட்டு வருவதாக கூறி எடுத்துச் சென்றார்.

சைகை மூலம் பேசிய கயவர்கள்
அப்போது தனியாக ஒரு இடத்தில் நின்றிருந்த பெண்ணை பார்த்து அங்கு மதுபோதையில் இருந்த 3 பேர் கைகளை காட்டி ஏதோ பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பிரியங்கா தனது தங்கைக்கு போன் செய்து அங்கு நிகழ்ந்த அசாதாரண சூழல்கள் குறித்து கூறினார். அப்போது அந்த மூவரும் உஷாராகி, பெண்ணின் வாயை பொத்தி மறைவான இடத்துக்கு தூக்கி சென்றனர்.

எரிந்த உடல்
அங்கு மூவரும் கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் வாகனத்துடன் வந்த முகமது பாஷாவும் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த 4 பேரும் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

உயிருடன் எரித்து கொலை
இதையடுத்து முகமது பாஷா உள்பட 4 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெண் மருத்துவரின் தாய் கூறுகையில் எனது மகள் அப்பாவி. எனது மகளை கொடூரமாக கொன்ற 4 பேரையும் பொது வெளியில் நிற்க வைத்து உயிருடன் எரிக்க வேண்டும் என கதறியவாறு கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications