சேலைக்கு நோ சொன்ன கணவன்.. மிளகாய் பொடி தூவி கதையை முடித்த பெண்.. தெலங்கானா அதிர்ச்சி
ஹைதராபாத்: கள்ள காதலுக்காக ஹனிமூனில் கொலை, கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை, கூலிப்படை வைத்து கொலை என்று பல அதிர்ச்சி கொலை சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் சேலை வாங்கி தரவில்லை என்ற காரணத்திற்காக தன்னுடைய கணவன் கண்களில் மிளகாய் பொடி தூவி சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கணவன், மனைவி என்றால் டாம் அண்ட் ஜெர்ரி போல முட்டல் மோதல்கள் இருப்பது இயல்புதான். சமையல் தொடங்கி ஷாப்பிங் வரை பெரும்பாலும் எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள். இதனால் சண்டைக்கு பஞ்சம் இருக்காது. சிலருக்கு சண்டை அவர்களின் அன்றாடம் நிகழும் ஒரு சம்பவம்.அதேநேரத்தில் சில தருணங்களில் சண்டை விபரீதமாகும்.

தெலங்கானாவில் கணவன், மனைவி இடையே அப்படி நடைபெற்ற சண்டை விபரீதமாகியுள்ளது. தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் வாட்ச் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு ரேணுகா என்பவருடன் திருமணமாகியிருந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல், என்பது போல ஆரம்பம் முதலே அவர்களுக்குள் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து இருந்து வந்துள்ளது.
சின்ன சின்ன விஷயத்துக்கு கூட குமார் - ரேணுகா இடையே பெரிய பெரிய சண்டை வந்து கொண்டிருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குமார், மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. தனக்கு சேலை வாங்கி தரச்சொல்லி குமாரிடம் ரேணுகா வாக்குவாதம் செய்துள்ளார். குமார் முடியாது என்று கூறியதால் பிரச்சனை வெடித்துள்ளது.
ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ரேணுகா சமையலறை சென்று மிளகாய் பொடி எடுத்து, கணவன் குமாரின் முகத்தில் தூவியுள்ளார். இதை எதிர்பாராத குமார் நிலை தடுமாறியுள்ளார். அவர் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்க ரேணுகா தனது புடவையால் குமாரின் கழுத்தை நெறித்துள்ளார்.
இதன் காரணமாக குமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தெலங்கானா காவல்துறையினர் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அந்த மாநிலத்தில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications