பயங்கரம்! 42 வயது பெண்.. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. "லிஃப்ட்" கேட்டு க்ளோஸ் செய்த இளைஞன்
ஹைதராபாத்: தன்னை விட வயது மூத்த பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அவரது கணவரை இளைஞர் ஒருவர் நூதனமான முறையில் கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள குண்டுராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாகேப் (50). இவருக்கு திருமணமாகி இமாம்பி (42) என்ற மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே, நேற்று முன்தினம் ஷேக் ஜமால், தனது மகளை பாப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் தனது தந்தை வராததால் சந்தேகமடைந்த அவரது மகள் நிஷா, தனது தந்தைக்கு ஃபோன் செய்தார். ஆனால் அவர் ஃபோனை எடுக்கவில்லை. தனது தாயார் இமாம்பியிடம் கேட்ட போது, அவரும் தந்தை வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளார்.

சாலையோரம் சடலம்...
இதையடுத்து, தனது தந்தை ஷேக் ஜமாலை காணவில்லை என போலீஸாரிடம் அவர் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் அவர் சென்ற வழியில் நள்ளிரவு தேடி பார்த்த போது சாலையோரத்தில் ஷேக் ஜமால் இறந்து கிடந்தார். ஆனால், அவரது உடலில் எந்தக் காயங்களும் இல்லை. விபத்து ஏற்பட்டதற்கான அறிகுறியும் இல்லை. பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கருதிய போலீஸார், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் கலந்த விஷம்..
ஆனால், பிரேதப்பரிசோதனையில் வந்த தகவல் போலீஸாரை அதிர்ச்சி அடையச் செய்தது. ஷேக் ஜமால் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவில்லை என்றும், அவரது உடலில் விஷம் கலந்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அதன் பிறகு, போலீஸார் இந்த தகவலை அவரது மனைவி மற்றும் மகளிடம் தெரிவித்தனர். அப்போது அவரது மகள் உடைந்து அழ, மனைவி இமாம்பி பெரிய அளவில் அதிர்ச்சி ஆகவில்லை.

மனைவியிடம் விசாரணை
இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் சாதாரணமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் தானும், தனது கள்ளக்காதலனும் திட்டமிட்டுதான் ஷேக் ஜமாலை கொலை செய்தோம் என இமாம்பி ஒப்புக் கொண்டார். மேலும், எப்படி தனது கணவரை கொன்றோம் எனவும் அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இளைஞருடன் பழக்கம்
இதுகுறித்து போலீஸாரிடம் இமாம்பி கூறியதாவது: ஓராண்டுக்கு முன்பு எங்கள் வீட்டின் அருகே மோகன் ராவ் (27) என்பவர் குடியமர்ந்தார். முதலில் சாதாரணமாக பேசி வந்த எங்களுக்குள் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறியது. எனது கணவர் இல்லாத நேரங்களில் அவர் என்னுடன் தனிமையில் இருந்திருக்கிறார். இதனால் அவருடன் சேர்ந்து வாழும் ஆசை எனக்கு ஏற்பட்டது. மோகன் ராவும் என்னுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

விஷ ஊசி
மோகன் ராவுடன் ஒரே தடையாக இருப்பது எனது கணவர்தான். அவரை தீர்த்துக் கட்டிவிட்டால் பிரச்சினை முடிந்தது என யோசித்தோம். ஆனால் கொலை செய்யும் போது மாட்டிவிடக் கூடாது என்பதற்காக ஊசி மூலம் விஷத்தை செலுத்த முடிவு செய்தோம். இதற்காக மோகன் ராவுக்கு தெரிந்த மருந்துக் கடைக்காரரிடம் விஷம் வாங்கினோம்.
இந்நிலையில், மகளை பார்ப்பதற்காக எனது கணவர் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். அப்போது இதுகுறித்து மோகன் ராவிடம் தெரிவித்தேன். அவரும், முகக்கவசம் அணிந்துகொண்டு அவரிடம் லிஃப்ட் கேட்பது போல சென்று அவருக்கு விஷ ஊசி செலுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். இவ்வாறு இமாம்பி கூறினார்.
இமாம்பியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரையும், அவரது கள்ளக்காதலன் மோகன் ராவையும் போலீஸார் கைது செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications