உலக கோப்பையை இந்தியா வென்றால்! விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்.. பிரபல நடிகை பரபரப்பு
ஹைதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என நடிகை ரேகா போஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் அரையிறுதியில் இந்தியா வென்று இறுதி போட்டிக்கும் நுழைந்துவிட்டது.
இந்தியாவில் 13 ஆவது உகல கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளில் 9 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. 10 ஆவது வெற்றி இலக்கு நேற்றைய தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதின.

உலக கோப்பை தொடரில் 1983, 2003, 2011 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 4ஆவது முறையாக இறுதி போட்டிக்கு இந்தியா நுழைந்துள்ளது. 2003 இல் மட்டுமே இந்தியா தோல்வியடைந்தது.
நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாச்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இறுதி போட்டியில் பங்கேற்கிறது. இந்திய அணியில் உள்ள ஆட்டக்காரர்கள் அனைவரும் ஃபுல் ஃபார்மில் உள்ளதால் இந்த முறையும் நாம்தான் கப்பை பெறுவோம் என நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது.
இந்த நேரத்தில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஃபுட்பால், பேட்மிண்டன், பாக்ஸிங் உள்ளிட்ட போட்டிகளில் தங்களது அணி வென்றால் சிலர் ஆடையின்றி மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். அதாவது ஆடையின்றி ஓடுவது. இந்த கலாச்சாரம் பெரும்பாலாம் மேலை நாடுகளில் உள்ளது. இதைத்தான் தற்போது ரேகா போஜும் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ரேகா போஜ் கூறுகையில் இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கமென்ட்டை பார்த்த பலர் ரேகா போஜ் தனது சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால் ரேகா போஜோ இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன்.
நான் பரபரப்புக்காக செய்யவில்லை என்றார். அதற்கு நெட்டிசன்கள், நாங்கள் நிச்சயம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வருகிறோம் என்றனர். ரேகா தேஜ் மாங்கல்யம், டாமினி வில்லா, காலாயா தாஸ்மை நாமா, காட்சயாமி, சுவாதி சினுகு. ரங்கீலா உள்ளிட்ட படங்களில் தைரியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

எனினும் அவருக்கு பட வய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் விசாகப்பட்டினத்தில் சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை தொடங்கியுள்ளார். இதன் மூலம் யூடியூபில் டிரென்ட்டிங்கில் இருக்கிறார். கடந்த காலங்களில் நிறைய வைரலான கருத்துகளை சொல்லி வந்தார். ரேகா கைலாசபுரத்தை சேர்ந்தவர், அவர் சிவில் என்ஜினியரிங் முடித்துள்ளார்.
நடித்துக் கொண்டிருக்கும்போதே அவருக்கு குறும்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. படிப்பு முடித்தவுடன் படங்களில் ஹீரோயினாக நடிக்க முயற்சிகளை செய்தார். 50-க்கும் மேற்பட்ட ஆட்டிஷன்களுக்கு சென்ற போது எல்லாரும் அவர் நயன்தாரா போல் இருப்பதாக சொன்னாலும் அவருக்கென பட வாய்ப்பை மட்டும் கொடுக்கவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து இளம் இயக்குநர் ராகேஷ் ரெட்டி பட வாய்ப்பை கொடுத்தார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications