Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசம் செய்த தயாரிப்பாளர்.. ரோட்டில் உட்கார்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய துணை நடிகை!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் பன்னி வாசு மீது குற்றம் சாட்டிய துணை நடிகை சுனிதா போயோ, அவரது அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகம் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாததுதான். திரைப்படங்களை போலவே அங்கு திரையுலகில் நடைபெறும் சம்பவங்களும் அதிரடியாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பன்னி வாசு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி துணை நடிகை சுனிதா போயா நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பட தயாரிப்பாளர்

பிரபல பட தயாரிப்பாளர்

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் பன்னி வாசு (Bunny vasu) டோலிவுட் திரையுலகில் கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பன்னி வாசு பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராகவும் இருக்கும் பன்னி வாசு பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் உள்ளார்.

துணை நடிகை சுனிதா போயா

துணை நடிகை சுனிதா போயா

மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா குற்றம் சாட்டி வருவது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் துணை நடிகை திடீரென நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால்..

நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால்..

அப்போது தனது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு நீதி வேண்டும் என்று கூறியபடி இப்படி போராட்டத்தில் அமர்ந்தார். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். சுனிதா போயாவை உடைகளை உடுத்த வைத்த பெண் போலீசார், தயாரிப்பாளர் பன்னி வாசு ஐதராபாத் வருகை தந்ததும் அவரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

இது முதல் முறையல்ல..

இது முதல் முறையல்ல..

தயாரிப்பாளர் பன்னி வாசுவிற்கு எதிராக சுனிதா போயா போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல.. ஏற்கனவே பலமுறை இப்படி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி போராட்டம் நடத்தியிருக்கிறார். கடந்த மே மாதம் இதே அலுவலகம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு சுனிதா பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

4 முறை ஆஸ்பத்திரிக்கு..

4 முறை ஆஸ்பத்திரிக்கு..

அப்போது புகார் அளித்திருந்தும் பன்னி வாசு மீது போலீசார் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தான் தற்போது மீண்டும் சுனிதா போயா போராட்டம் நடத்தியுள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாமல் நான் 4 முறை ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் சுனிதா போயா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+