"ஒரு பெயில்தான் விழுந்தது".. தமிழில் பேசிய தினேஷ்! அஸ்வினும் இல்லையே.. யார் கிட்ட பேசினார் தெரியுமா?
ஹைதராபாத்: நேற்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் தினேஷ் கார்த்திக் திடீரென தமிழில் பேசினார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி நேற்று வெற்றிபெற்றது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி 20 ஓவரில் 186/7 ரன்கள் எடுத்தது.
கேமரூன் கிரீன் 21 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அக்சர் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்தார்.
இவர் 3 விக்கெட்டுகளை நேற்று எடுத்தார். இதன்பின் ஆடிய இந்திய அணியில் கோலி 63, சூர்ய குமார் யாதவ் 69 ரன்கள் எடுத்து அசத்தினர். இதனால் 19.5 ஓவரில் இந்திய அணி 187-4 ரன்கள் எடுத்து வென்றது.

தினேஷ் கார்த்திக்
நேற்று நடந்த இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் திடீரென தமிழில் பேசினார். பொதுவாக தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் களத்தில் பல மொழிகளில் பேச கூடியவர். தெலுங்கு பூர்வீகம் என்பதால் தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார். அவ்வப்போது சஞ்சு சாம்சனிடம் மலையாளத்திலும் பேசி இருக்கிறார். இந்தி, ஆங்கிலமும் சரளமாக பேச கூடியவர். இந்திய அணியில் தமிழர்கள் இருந்தால் தமிழில் பேசுவார்.

தமிழ்
வருண் சக்ரவர்த்தி, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் பலரிடம் தினேஷ் கார்த்திக் தமிழில்தான் பேசி இருக்கிறார். நேற்று நடந்த போட்டியிலும் தினேஷ் கார்த்திக் திடீரென தமிழில் பேசினார். நேற்று அஸ்வின் மைதானத்தில் இல்லை. அதேபோல் கே. எல் ராகுலும் தினேஷ் கார்த்திக் அருகில் இல்லை. ஆனாலும் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். நேற்று 8வது ஓவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சாஹல் வீசினார்.

யாரிடம் பேசினார்?
அப்போது மெக்ஸ்வெல் அக்சர் அடித்த த்ரோவில் ரன் அவுட் ஆனார். ஆனால் இதில் என்னவென்றால் தினேஷ் கார்த்திக் பந்து கைக்கு வரும் முன்பே ஒரு ஸ்டம்பை கையால் தட்டிவிட்டுவிட்டார். இதில் ஒரு பெயில் வந்துவிட்டது. இது போன்ற சமயங்களில் ரன் அவுட் செய்ய கிரிக்கெட் ரூல்ஸ் ஒன்று உள்ளது. ஒரு பெயில் ஏற்கனவே விழுந்துவிட்ட நேரங்களில் விக்கெட் எடுக்க வேண்டும் என்றால் இரண்டாவது பெயிலை பந்து நேரடியாக தாக்கி தூக்க வேண்டும்.

என்ன நடந்தது?
ஒருவேளை கீப்பர் தவறுதலாக இரண்டு பெயிலையும் நீக்கி இருந்தால்.. மொத்தமாக ஒரு ஸ்டம்பை பந்து நேரடியாக தூக்க வேண்டும். நேற்று தினேஷ் கார்த்திக் ஒரு பெயிலை தூக்கிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டாவது பெயில் நீங்காமல் இருந்தது. அதேபோல் அக்சர் அடித்த த்ரோவும் சரியாக இரண்டாவது பெயிலை தூக்கியது. இதனால் மேக்ஸ்வெல்லுக்கு விக்கெட் கொடுக்கப்பட்டது.

சொன்னது என்ன?
இந்த விக்கெட் கேட்கப்பட்ட போதுதான் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். நேற்று போட்டியில் நடுவர்களாக ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன் இருவரும் இருந்தனர். இரண்டு பேருக்கும் தமிழ் தெரியும். இவர்களிடம்தான் தினேஷ் கார்த்திக்.. பெயில் ஒன்று இருக்கிறது பாருங்கள். ஒன்று மட்டுமே விழுந்துள்ளது. இதை 3வது நடுவரிடம் சொல்லுங்கள் என்று கூறினார். நேற்று தமிழக வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் இவர் நடுவரிடம் தமிழில் பேசியது வைரலாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications