119 தெலுங்கானா எம்எல்ஏக்களில் 73 பேர் யார் தெரியுமா.. அதிர வைக்கும் டிஆர்எஸ்
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 119 எம்எல்ஏக்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருபவர்கள் என்றும் அவர்களின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு 2014ம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று, முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியேற்றார். சட்டசபை பதவிக்காலம் முடிவடைய பல மாதங்கள் இருந்த நிலையில், முன்கூட்டியே அதை கலைத்து, தேர்தலையும் துணிந்து எதிர்கொண்டார்.
தேர்தலில் 4 முனை போட்டி நிலவினாலும் டிஆர்எஸ் கட்சி 88 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மை பலம் பெற்றது. சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, முதல்வராக தொடர்ந்து 2வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவியேற்றார்.

சீர்திருத்த சிந்தனை
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ஜனநாயக ரீதியான சீர்திருத்த சிந்தனை சங்கமான ஏடிஆர் என்ற சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆய்வறிக்கையில், தெலுங்கானா பேரவைக்கு 2018-இல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 119 எம்எல்ஏக்களில் 73 பேர் (அதாவது 61 சதவீதம்....) குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றம்
குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 77 பேரில், 47 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு பேரவையில் இடம்பெற்ற ஒரு எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு 7 கோடியே 70 லட்சமாக இருந்தது.

பல மடங்காக உயர்ந்த சொத்து
அவர்களின் சொத்து மதிப்பு முந்தைய உறுப்பினர்களோடு ஒப்பிடுகையில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் இடம்பெற்றுள்ள எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்து, 15 கோடியே 71 லட்சமாக உள்ளது.

ராஜகோபால் ரெட்டி
எம்எல்ஏக்களில் காங்கிரசை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி 314 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரைத்தொடர்ந்து மாரி ஜனார்த்தன் ரெட்டி (டிஆர்எஸ்), கே. உபேந்தர் ரெட்டி (காங்கிரஸ்) ஆகியோர் ரூ. 161 கோடி, 91 கோடி சொத்துக்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications