ஒட்டிய தலையுடன் வாழும் “இரட்டை சகோதரிகள்” -தெலுங்கானா இடைநிலைத் தேர்வில் முதல் தரத்தில் வென்று சாதனை
ஐதராபாத்: தெலுங்கானா மாநில இடைநிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் ஒட்டிய தலையுடன் வாழும் இரட்டை சகோதரிகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் இருப்பதைபோல் தெலுங்கானாவில் அதற்கு பதிலான இடைநிலை முதல் ஆண்டு, இடைநிலை 2 ஆம் ஆண்டு வகுப்புகள் உள்ளன.
இந்த இடைநிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தெலுங்கானாவிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி
இதில், இடைநிலை முதலாம் ஆண்டில் 2,94,378 பேர் தேர்வெழுதி 63.32 சதவீத மாணவர்களும், 2 ஆம் ஆண்டில் 4,42,895 பேர் தேர்வெழுதி 67.16 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். முதலாம் ஆண்டில் மாணவிகள் 72.33 சதவீதமும், மாணவர்கள் 54.25 சதவீதமும் தேர்வாகி இருக்கின்றனர். அதேபோல், 2 ஆம் ஆண்டிலும் மாணவிகள் 75.28 சதவீதமும், மாணவர்கள் 59.21 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டிய தலைகொண்ட இரட்டை சகோதரிகள்
இதில் ஐதராபாத்தை அடுத்துள்ள யூசுஃப்குடா பகுதியை சேர்ந்த இடைநிலை 2 ஆம் ஆண்டு படித்து வந்த இரட்டை சகோதரிகள் பொதுத்தேர்வில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தனியாக சொல்ல இவர்கள் என்ன ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். இவர்கள் இருவரும் சாதாரண இரட்டையர்கள் அல்ல. இருவரது தலையும் பிறக்கும்போதே ஒட்டி இருந்தன.

மொழிப்பாடங்களில் அதிக மதிப்பெண்
ஒட்டிய தலையுடனே பள்ளிக்கு சென்று வந்த இவர்கள், பொதுத்தேர்விலும் சாதித்து இருக்கின்றனர். பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல் பிரிவுகளை முதன்மை பாடமாக இவர்கள் தேர்வு செய்து படித்தனர். அதே நேரம் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் பாடங்களில் நல்ல மதிப்பெண்களை பெற்று அசத்தி உள்ளார்கள்.

அமைச்சர் பாராட்டு
இடையர்களில் ஒருவரான வாணி 712 மதிப்பெண்களையும், மற்றொருவரான 707 மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றனர். இவர்களை பாராட்டியுள்ள தெலுங்கானா மாநில பழங்குடியினர் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யாவதி ரத்தோட், இவர்களின் உயர்கல்விக்கான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications