“பாகிஸ்தானுடன் போருக்கு போக வேண்டாம்.. இதுதான் நடக்கும்” ஆருடம் கணித்த விஜய் தேவரகொண்டா
ஹைதராபாத்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உரசல்கள் அதிகரித்திருக்கிறது. இது எந்நேரமும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது பற்றி பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, "போர் வேண்டியதில்லை" என்று கூறியுள்ளார்.
மட்டுமல்லாது போருக்கு மாற்றான யோசனையையும் முன்வைத்திருக்கிறார். பக்கத்தில் சூர்யா நிற்க, விஜய் தேவரகொண்டா பேசியது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் மே-1ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்றிருந்தார். அவர் பேசிய விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
"காஷ்மீரில் தாக்குதல் நடந்த சம்பவம் பற்றி நான் சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, இதுபோன்ற தாக்குதல்களால் நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்? என்பதை விளக்க வேண்டும். காஷ்மீர் இந்தியாவுடையதுதான். காஷ்மீரிகள் நம் நாட்டை சேர்ந்தவர்கள்தான். இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் குஷி திரைப்படத்திற்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அங்குள்ள மக்களுடைய நினைவு எனக்கு இனிமையானதாக இருக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் கரண்ட் இல்லை. தண்ணீர் இல்லை. இப்போதிருக்கும் சூழலில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டியதில்லை. அந்நாட்டு மக்களுக்கே அரசு மீது வெறுப்பு ஏற்பட்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவார்கள். நாம் ஒற்றுமையாக இருப்போம்" என்று பேசியிருக்கிறார்.
காஷ்மீரில் என்ன பிரச்சனை? ஏன் இந்த தாக்குதல் நடந்தது? தாக்குதலுக்கு எதிராக இந்திய மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் பேசுபொருளாகிக்கொண்டிருக்கையில் விஜய் தேவரகொண்டா பேசியது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் பாகிஸ்தான் மீதான தாக்குதல் அவசியமற்றது என்று தேவரகொண்டா பேசியிருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷர் இ தொய்பா அமைப்பின் கிளை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications