சூர்யாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு.. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிய விஜய் தேவரகொண்டா
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற சூர்யா நடிப்பில் உருவாகும் 'ரெட்ரோ' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா மறைந்த முகலாய மன்னன் அவுரங்கசீப் பற்றிய தனது ஆவேசமான கருத்துக்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுமா, விஜய் தேவரகொண்டாவிடம் காலப் பயணம் செய்து எந்த வரலாற்றுப் பிரபலத்தைச் சந்திக்க விரும்புவீர்கள் என்று கேட்டார். இந்த லைட்-ஹார்டட் கேள்விக்கு விஜய் தேவரகொண்டா அளித்த பதில் அனைவரையும் அதிர வைத்தது.

"நான் பிரிட்டிஷாரைச் சந்திக்க வேண்டும், ஆனால் வார்த்தைகளால் அல்ல, இரண்டு அறை விட வேண்டும்" என்று விஜய் தேவரகொண்டா கூறினார். சமீபத்தில் தான் பார்த்த விக்கி கௌஷல் மற்றும் அக்ஷய் கன்னா நடித்த 'சாவி' (Chhaava) திரைப்படம் தன்னை மிகவும் பாதித்து கோபப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதேபோல், அவுரங்கசீப்பையும் சந்தித்து இரண்டு மூன்று அறை விட வேண்டும். இன்னும் பலரைப் பார்த்து அடிக்க வேண்டும் என்ற எண்ணமே இப்போது என் மனதில் உள்ளது" என்றார்.

விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "கடந்த காலத்தில் எனக்கு யாரையும் பெரிதாக நியாபகம் இல்லை, அதனால் யாரைச் சந்திக்க வேண்டும் என்று தெரியவில்லை" என்று பதிலளித்தார்.
பின்னர், எந்த நடிகையுடன் காலப் பயணம் செய்து நடிக்க விரும்புவீர்கள் என்று விஜய்யிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர், ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன், விஜயசாந்தி போன்றோரைத் தேர்ந்தெடுக்காமல், சிம்ரன் மற்றும் சோனாலி பிந்த்ரேயைத் தேர்ந்தெடுத்தார். ஜோதிகாவையும் குறிப்பிட்ட அவர், ஆனால் அவர் இப்போது, சூர்யாவின் மனைவி என்பதால் கூச்சத்தோடு தயங்கியபடி சொன்னார்.

இதே நிகழ்ச்சியில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும் விஜய் தேவரகொண்டா பேசினார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பல பயங்கரவாதிகள் மூளைச் சலவை செய்யப்படுவதாகக் கூறினார். தெலுங்கு மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் பேசிய அவர், "அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமானது, காஷ்மீரிகள் நம்முடையவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் காஷ்மீரில் 'குஷி' படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களுடன் எனக்கு நல்ல நினைவுகள் உள்ளன" என்றார்.

அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று வலதுசாரியினர் போராட்டம் நடத்தியதால் மகாராஷ்டிராவில் பெரும் கொந்தளிப்பு ஏற்ப்டட நிலையில் விஜய் தேவரகொண்டா இப்படி பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications